09-17-2005, 01:56 PM
jothika Wrote:Mathan Wrote:MUGATHTHAR Wrote:நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான்
அம்மன் கோயில்ல நவகிரகம் இருக்குமா :roll: எனக்கு சரியாக தெரியவில்லை,
சனிக்கிரகம் வாயுவினால் ஆனது. 75 விழுக்காடு நீரகமும் (hydrogen) 25 விழுக்காடு பரிதியம் (helium) இவற்றினால் ஆன கோள். எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம் நீரகமாகும். தண்ணீரோடு ஒப்பிடும்போது அதன் வீத எடைமானம் ( 0.7) ஆகும். உட்புறம் பாறைகளினால் ஆனது. வியாழனுக்கு அடுத்த பெரிய கோள். பூமியில் இருந்து சுமார் 8,500,000 கிமீ (6,300,000 மைல்) தூரத்தில் உள்ளது. அதன் விட்டம் மத்திய கோட்டில் 120, 536 மிமீ. திண்மம் 5.68 கிலோகிராம். சூரியனை 1,429,400,000 கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது.
சனிக்கோளை 30 உபகோள்கள் சுற்றி வருகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்தே சனிக் கோள் பற்றி மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. ரோமரது புராணக் கதையில் சனி பயிர்த்தொழிலின் கடவுள். கிரேக்கத்தில் சனியை குறோனஸ் (Gronus) கடவுள் என அழைத்தார்கள். இந்தக் கடவுள் Zeus (வியாழன்) கடவுளின் தந்தை. சனிக் கோளை தொலைநோக்கி மூலம் பார்த்த (கிபி 1610) முதல் மனிதர் கலிலியோதான். அதனைக் காகம் போல கன்னங்கரிய கோளாகச் சோதிடம் சித்திரித்தாலும் அது உண்மையில் பார்ப்பதற்கு மிகவும் ஒளிமயமான கோள்.
பூமியில் இருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கோள் இங்குள்ள ஒருவரது வாழ்க்கையின் போக்கை, அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில், எப்படிப் பாதிக்க முடியும் என்பதையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சரி அப்படித்தான் பாதிக்கிறதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு விரதம் இருந்து எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அந்தக் கிரகத்தைத் திருப்திப் படுத்திவிட முடியுமா? திருப்திப்படுத்தலாம் என நினைத்து நவக்கிரகங்களை சுற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
http://sooriyan.com/index.php?option=conte...=1617&Itemid=34
ஒம் அம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் இருக்கின்றன ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

