09-16-2005, 01:11 PM
இதுநடந்தது தர்மபுரியில் உள்ள ஒரு கிராமத்தில். மகளைப்பார்ப்பதற்குச்சென்ற ஒரு தாய் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அந்தத்தாய் மகள்மீதுமிகவும் பாசமுள்ளவராம். இறந்த அன்றே மாலை அவரது மகள் அவரைப்பார்த்தாராம். மகள் சமையல் அறையில் வேலைசெய்துகொண்டு இருந்தபோது வீட்டின் வெளியில் இருந்து அவரைத் தாய் கூப்பிட்டதாகவும் வெளியே வந்து பார்த்தபோது சிலநொடிகளில் அவர் மறைந்துவிட்டாராம். இது நடந்து பல ஆண்டுகளாகவும் அவர் தொடர்ந்து இரவில் வந்து மகளின் பெயரைக்கூப்பிட்டுவது உண்டாம். ஒருதடவை தாயைப்பார்த்து மகள் மூர்ச்சையாகிவிழுந்த சம்பவமும் உண்டாம். இதன்பின் பயந்து போன உறவினர்கள் ஈமைக்கடன்களை மீண்டும் செய்து வீட்டில் கணபதிகோமம் செய்தபின்தான் தாய் வருவது நின்றதாம்.

