09-16-2005, 11:40 AM
நாங்கள் கொடைக்கானல் சென்றுவிட்டு வாடகை வானில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். இரண்டு பக்கமும் புளிய மரங்கள். தெருவில் வேறு ஒரு வாகனமும் இல்லை. வீடுகளோ விளக்கு வெளிச்சமோ ஒன்றுமில்லை. எம்முடன் வந்த நண்பர்கள் நல்ல நித்திரை. நான் ஓட்டுனர் நித்திரை கொள்ளாமல் இருக்க அவருடன் சேர்ந்து கதைத்துக்கோண்டு அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு திருப்பத்தில் கடந்து வந்தபோது யாரோ நடு வீதியில் நிற்பது தெரிந்தது. வானை ஓட்டுனர் சடுதியாக பிரேக் போட்டு நிறுத்தினார். அதற்கும் அந்த உருவம் அசையவில்லை. எமக்;கு வயிற்றை பயம் கவ்விக்கொண்டது. சிறிது நேரத்தில் அந்த ஒருவம் மெதுவாக அசைந்து நடக்கத்தொடங்கியது. அது தெருவைக்கடந்ததும் நாங்கள் வானை வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றுவிட்டோம். அடுத்து வந்த ஒரு கிராமத்தில் தேனீர் குடிக்க நிறுத்தியபோது நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் சொன்னோம். அவர்கள் சிரி;த்துக்கொண்டு அது வேறு ஒன்றுமில்லை யாரோ ஒருpற பைத்தியக்காரன்தான் தூங்காது நடுத்தெருவில் தெருவில் நிற்பது என கூறினர். அன்று பயந்ததை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த சில நொடிகள் மிகவும் பயந்துவிட்டோம் என்பது உண்மைதான்.

