11-07-2003, 12:38 PM
அன்று தேவாலையம், கோவில்கள் குண்டு வீசித் தகர்ப்பதற்கு குண்டு பணத்திற்காவது கடனுக்காவது விற்கலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு. என்ன கொடுத்தாலும் இரும்பு மனிதர்கள் அசையார் என்ற செய்தி ஆனையிறவிற்குப் பின் சர்வ தேசத்திற்கும் புரிந்து விட்ட விடப்பட்ட செய்தி. இதற்கு மேலும் அவர்களிடம் விற்க வழியில்லை. தமது முகங்களில் புூசப்பட்ட கரியையாவது துடைப்போம் என்று ஒரு சில வல்லரசுகள் நினைக்கின்றன. அது தான் அந்தப் பார்வை. எம் மீது அனுதாபம் கொண்டல்ல. நேற்றைய செய்தியில் ஆர்மிடேஜ் சொன்ன கதை கேட்டீர்கள் தானே. வி.புலிகள் தமது வன்முறையினாலும் போரினாலும் களைப்படைந்து விட்டார்களாம். அதனால் தான் அவர்களின் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எல்லாம் என்பது போல கதை விட்டுள்ளார். புரிந்து கொள்ளுங்கள். ஒரு சில சர்வதேசத்தின் அனுதாபங்களை. அனைத்தையும் அறியத் தந்த அந்த ஒப்பற்ற தலைவனின் சாணக்கியத்தை எண்ணி வியர்க்கின்றேன். நகர்த்த வேண்டிய நேரம் நகர்த்த வேண்டிய காய்களை வெகு லாவகமாக நகர்ததிக் கொண்டிருக்கின்றான் எம் தேசத்தின் தலைவன். வெற்றிக் கனிகளைப் பெற்றுத் தருவான் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.
அன்புடன்
சீலன்.
அன்புடன்
சீலன்.
seelan

