Yarl Forum
குழப்புவது யார் ?குழம்புது யார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: குழப்புவது யார் ?குழம்புது யார் (/showthread.php?tid=7855)

Pages: 1 2

குழப்புவது யார் ?குழம் - suppiah suthanthararajah - 11-06-2003

குழப்புவது யார் ?குழம்புது யார் ?கூடாதவர் யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?
மூன்று அமைச்சுகள் கலைப்பு ;பாராளுமன்றம் இடை நிறுத்தம்:அவசரகாலநிலை பிரகடனம்.போர்நிறுத்தம் என்னவாகும்?பேச்சுவார்த்தை என்னவாகும்?என்று தமிழ்மக்கள் மட்டுமல்ல சர்வதேசசமூகமும் ஆர்வத்தோடு நோக்குகின்றன.கோயில்களில் குணடுவீசப்பட்ட போது கேட்காதவர்கள்,தேவாலயங்கள் சிதைக்கப்பட்ட போது சிந்திக்காதவர்கள் இன்று ஈழத்தையே பார்த்துக் கொண்டிர்கிறார்கள்.ஐ.நா செயலாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.அமெரிக்கத்தலைவர் புருவங்களுயர்த்துகின்றார்.ஐரோப்பிய ஒன்றியம் அஙகலாய்க்கின்றது.இந்தியா ஆச்சரியம் தெரிவிக்கின்றது. ஏன் இந்த உலகமே ஈழத்தைப் பார்த்துக் கொணடிருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இது எல்லாமே பழகிப் போனவை.மாவட்டம் மகாவட்டமாய்ப் போய்விட்டது.மாகாணம் புஸ்வாணமானது திம்பு பெரிய வம்பாய்ப் போனது "விடாக்கொண்டன் கொடாக்கண்டன்"என்ற தெற்கிலங்கை அரசியல் மாறும் வரை பேச்சுவார்த்தைகள் எல்லாம் பேசாமடந்தைகளே! .அரசியல் தீர்வென்பநு ஆகாயத்தாமரையே.இருந்தாலும் இன்றும், இபோதும் தமிழ் மக்கள் மட்டுமல்ல; தமிழீழ விடுதலைப்புலிகளும் சமாதானத்தையே விரும்புகிறார்கள்.ஊடகங்களின் தணிக்கை இனி ஏற்பட்டாலும் வன்னி ஊடகவியலாளர் மகாநாடு,மேற்குலக அக்கறை என்பன பெரிய வெற்றிகளே!
குழப்புவது யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?என்று தீர்க்கதரிசனத்துடன் செல்வன் சுதந்திரராஜா இளவரசன் சுவீடனில் நவ2002 இல் நடந்த மாவீரர் தின விழாவிலே ஒரு கவிதை மூலம் கூறியுள்ளார்.அதன் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
பகைவரை சேர்த்திடும் பக்குவம்
பாதகரை விரட்டிடும் தத்தவம்
சாணக்கியன் அறியாத சாணக்கியம்
சரித்திரம் போற்றிடும் சாமர்த்தியம்

ஆம்! தமீழவிடுதலைப் புலிகள்

மறைந்தடிக்கும் போராளிகள் மட்டுமல்ல
மரபு வழிப் போர் வீரர் மாத்திரமல்ல
அரசியல் சாணக்கியம், தீர்க்கதரிசனம் உள்ளவர்கள்.

உண்மை அறியாத ஊடகங்கள்
ஊடகஙகள் அறியாத பூடகங்கள்
வேடங்கள் மாறாத நாடகங்கள்
பாடங்கள் படிக்காத அரசுகள்

இவற்றை மாற்றி
ஏடுகள் அறிந்த செய்தி
நாடுகள் புரிந்த உண்மை
கிழக்கும் மேற்கும் சேர்ந்து
வழக்குப் பார்க்கும் விந்தை
இப்போ
நடுநிலை நாடு சேர்ந்து
அரசியல் தீர்வு வேண்டி
பேச்சு வார்தத்தை என்று
பேரம் பேசுவது வெற்றி
இனி
குழப்புவது யார்?குழமபுவது யார்?
கூடாதவர் யார்?கோடாரிக்காம்பாக மாறுவது யார்?
என நாளை உலகறிந்தால் நமக்கு அதுவும் ஒரு வெற்றியே

- சுதந்திரன்-

:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- P.S.Seelan - 11-07-2003

அன்று தேவாலையம், கோவில்கள் குண்டு வீசித் தகர்ப்பதற்கு குண்டு பணத்திற்காவது கடனுக்காவது விற்கலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு. என்ன கொடுத்தாலும் இரும்பு மனிதர்கள் அசையார் என்ற செய்தி ஆனையிறவிற்குப் பின் சர்வ தேசத்திற்கும் புரிந்து விட்ட விடப்பட்ட செய்தி. இதற்கு மேலும் அவர்களிடம் விற்க வழியில்லை. தமது முகங்களில் புூசப்பட்ட கரியையாவது துடைப்போம் என்று ஒரு சில வல்லரசுகள் நினைக்கின்றன. அது தான் அந்தப் பார்வை. எம் மீது அனுதாபம் கொண்டல்ல. நேற்றைய செய்தியில் ஆர்மிடேஜ் சொன்ன கதை கேட்டீர்கள் தானே. வி.புலிகள் தமது வன்முறையினாலும் போரினாலும் களைப்படைந்து விட்டார்களாம். அதனால் தான் அவர்களின் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எல்லாம் என்பது போல கதை விட்டுள்ளார். புரிந்து கொள்ளுங்கள். ஒரு சில சர்வதேசத்தின் அனுதாபங்களை. அனைத்தையும் அறியத் தந்த அந்த ஒப்பற்ற தலைவனின் சாணக்கியத்தை எண்ணி வியர்க்கின்றேன். நகர்த்த வேண்டிய நேரம் நகர்த்த வேண்டிய காய்களை வெகு லாவகமாக நகர்ததிக் கொண்டிருக்கின்றான் எம் தேசத்தின் தலைவன். வெற்றிக் கனிகளைப் பெற்றுத் தருவான் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.

அன்புடன்
சீலன்.

- Mathivathanan - 11-07-2003

P.S.Seelan Wrote:அன்று தேவாலையம், கோவில்கள் குண்டு வீசித் தகர்ப்பதற்கு குண்டு பணத்திற்காவது கடனுக்காவது விற்கலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு. என்ன கொடுத்தாலும் இரும்பு மனிதர்கள் அசையார் என்ற செய்தி ஆனையிறவிற்குப் பின் சர்வ தேசத்திற்கும் புரிந்து விட்ட விடப்பட்ட செய்தி. இதற்கு மேலும் அவர்களிடம் விற்க வழியில்லை. தமது முகங்களில் புூசப்பட்ட கரியையாவது துடைப்போம் என்று ஒரு சில வல்லரசுகள் நினைக்கின்றன. அது தான் அந்தப் பார்வை. எம் மீது அனுதாபம் கொண்டல்ல. நேற்றைய செய்தியில் ஆர்மிடேஜ் சொன்ன கதை கேட்டீர்கள் தானே. வி.புலிகள் தமது வன்முறையினாலும் போரினாலும் களைப்படைந்து விட்டார்களாம். அதனால் தான் அவர்களின் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எல்லாம் என்பது போல கதை விட்டுள்ளார். புரிந்து கொள்ளுங்கள். ஒரு சில சர்வதேசத்தின் அனுதாபங்களை. அனைத்தையும் அறியத் தந்த அந்த ஒப்பற்ற தலைவனின் சாணக்கியத்தை எண்ணி வியர்க்கின்றேன். நகர்த்த வேண்டிய நேரம் நகர்த்த வேண்டிய காய்களை வெகு லாவகமாக நகர்ததிக் கொண்டிருக்கின்றான் எம் தேசத்தின் தலைவன். வெற்றிக் கனிகளைப் பெற்றுத் தருவான் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.
ஆமிட்டேஜ் அப்பிடி சொன்னாரோ.. அல்லாட்டில் உங்களது மனம் அப்படி சொன்னதாக எடைபோடுதோ.. எப்படியிருந்தாலும்.. ........திலை உள்ளதுதானே ........வரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அடிச்சு அப்பம் தீத்த ஏ - suppiah suthanthararajah - 11-07-2003

தம்பி சீலன்! சரியாகச் சொன்னீங்கள்.ஊராக்கில போய் பாராக்கு பார்த்து விட்டு ஆப்பிழுத்த குரங்கு போல அவதிப்படுறது.ஆ-யு வா,பே.யு வா என்று கத்துறது.அண்டைக்குச் சொல்லிச்சினம்-"டோக்கியோவில கதைச்சதை விட ஒஸ்லோவில கதைச்சதை விட கூடக் கேக்கிறாங்கள்" எணடு;இப்ப பொடியள் களைச்சுப் போட்டினம் எண்டுகினமோ?
எல்லா நாடுகளும் கரிசனையாய் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க வேணும் எணடுறாங்கள்.யாராவது தமிழற்றை பிரச்சனைச்சினை எணடு சொல்லுறாங்களா?சுதநதிரவர்த்தக வலயம், வேற பிஸ்னஸ்சுகள் இன்னும்.....அது சரி. ஆடுகள் நனையுது எணடு ஓநாய்கள் அழுதாலும் உண்மையாய் யார் கவலைப்படுறது?புலிகள்தானே!ஏன் இந்த சனங்களும் கஸ்டடப்படுதுகளென்று தானே புலிகளும் போர்நிறுத்தங்கள் செய்தது.ஒண்டு மட்டும் சொல்லுறன்.அடிச்சு அப்பம் தீத்த ஏலாது

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: அடிச்சு அப்பம் தீத்த - Mathivathanan - 11-07-2003

சனம் கஸ்ரப்படுகுது எண்டு போர்நிறுத்தம் செய்தது எண்டு சொல்லி பூச்சாண்டிகாட்டுறியள்.
உங்களுக்கு மறந்தாலும் எனக்கு ஞாபகம் இருக்கு.
அந்தநேரம் விட்ட அறிக்கையளை திரும்பக்கேட்டியளெண்டால்த் தெரியும்.
<span style='font-size:25pt;line-height:100%'>பின்லாடனுக்கும் புஸ் உக்கும் </span>மனப்பூர்வமா நான் நன்றியைத் தெரிவிக்கிறன்.
இடையிலை கொள்கைமாறி அங்கி இஞ்சை பாய்ஞ்சதெல்லாம் உங்களுக்கு மறந்துபோகும். யாரிட்டையெல்லாம் என்ன என்னவோவெல்லாம் கேட்டு கூட்டுப்போனதெல்லாம் உங்களுக்கு மறந்துபோகும் தெரியும். இப்ப பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேணும் அதுதான் எல்லாருக்கும் முன்னுக்கு நிக்குது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 11-08-2003

தாத்தா உங்களுக்கு இந்த வல்லரசுக்கள் சொல்வதெல்லாம் தாரக மந்திரம். இரண்டு நாட்களுக்கு முந்தய பத்திரிகை;களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். வேலை அதிகமெனில். பாட்டியிடம் கொடுங்கள் பார்த்து வைப்பார்கள். பார்வையும் சரியில்லை. அவர்கள் உதவி செய்வார்கள்.

அன்புடன்
சீலன்

- Mathivathanan - 11-08-2003

அறிக்கை மேலை அறிக்கை ஆய்வுக்கு மேலை ஆய்வு அதைவிட மகாநாடு எல்லாத்திலையும் பின்லாடன் அடியோடை எல்லாம் மாறினது எண்டு சொன்னதை நீங்கள் மறந்துபோவியள் தெரியும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

kulappuvathu yar? - suppiah suthanthararajah - 11-08-2003

அன்று விடுதலைப போராட்டங்கள் பனிப்போர்காலத்திற்கு முன், பனிப்போர்காலத்திற்குப் பின் என
மாற்றங்கள் கண்டன.இன்று பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்கு முன், பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்குப் பின் என மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தன.அது மட்டுமலல. ஈழத்தமிழர் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தெற்காசிய அரசியலில் மட்டுமல்ல சர்வதேச நிகழ்வுகளுக்கு தக்கதாகவும் காய்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
கூட்டுப்போறது வேற:கொள்கை மாறுறது வேற.கூட்டுப்போனவர்கள் விசயம் முடிஞ்சதும் காய் வெட்டினா என்ன செய்யுறது?
இப்போது ஈழத்தமிழர் போராட்டத்தில் காய்கள் விவேகமாகவே நகர்தப்படுகின்றன என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.எது எப்படி இருந்த போதும் சமாதானம்,நல்லதோர் தீர்வு எனபதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Re: kulappuvathu yar? - Mathivathanan - 11-08-2003

சண்டைக்காய் 18 வருஷம் நகர்த்தி முடிந்து சமாதானக்காய் தற்போது இரண்டு வருடங்கள்தானே நகர்த்தியிருக்கு. சனத்துக்கு சண்டைக்கான ஆசை விட்டுப்போச்சு. அது வெளிப்படையாக வரத்தெடங்கீட்டுது.அப்ப காயோ பழமோ நகர்த்தித்தானே ஆகணும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 11-08-2003

நேற்று சினேகிதன் ஒருத்தனைச் சந்திச்சன். ஒருவருஷத்துக்கு முந்தி சிங்கப்புபூர் எண்டு சொன்னவன் நேற்று இஸ்ரேல் எண்டான். எனக்கு விளங்கயில்லை. ஏன் இஸ்ரேல் எண்டு கேட்டன்.. உலகம் முழுவதும் இருக்கிற யூதருக்கு அமெரிக்கன் இஸ்ரேல் குடுத்த மாதிரி புஸ் ரணில் சேர்ந்து உலகம் முழுவதும் இருக்கிற தமிழருக்கு தமிழீழம் குடுக்க ஏற்பாடு செய்தாச்சாம். பிரித்தானிய முறைப்படி சட்டமாம். ஆனால் அதைவிட இறுக்கமான சட்டமாம். இந்தப் பிளான்.. அந்த சிஸ்ரம்.. இப்படிப் பலதும்..

மாதாமாதம் கனக்க குடுக்கிறவன் உள் விஷயம் அறிஞ்சவன். அப்படியா.. நல்லதுதானே.. எண்டு சொல்லிப்போட்டு வந்திட்டன்.. உங்களுக்கு ஏதாவது இப்படியான செய்தி வந்தது தெரியுமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 11-09-2003

அட செய்தி புதிதாகத் தான் உள்ளது. அப்படியாவது கிடைக்கட்டும். பிறகு பார்ப்போம் யார் சட்டங்கள் அங்கே செல்லுபடியாகுமேன்று. அட ஆச்சரியமாயிருக்கின்றதே உங்களுக்கும் கணக்கக் கொடுப்பவர் சினேகிதம் உள்ளதா? கேட்டுப் பார்க்க வில்லையா ஏன் கணக்கக் கொடுக்கின்றீர்கள் என்று?

அன்புடன்
சீலன்

- Mathivathanan - 11-09-2003

ஐயா சீலன்.. நான் பலரை சந்திக்கிறேன்.. ஒரே கருத்துடன் இருப்பவர் சிலர் தினம்தினம் மாறுபவர் பலர்.. அவனவன் பிரச்சனை அவனவனுடையது.. அரைக்கும் மிளகாய் காரத்துக்குத்தக்க.. ஒருநாள் அமெரிக்கா நல்லவன் என்பார்.. மறுநாள் இல்லை இந்தியா நல்லவன் என்பார்.. ஒருநாள் எல்லொரும் துரொகியென்பார்.. நான் எதுவுமே சொல்வதில்லை.. கேட்டு அபிப்பிராயம் எடுப்பதுடன் எனது கணக்கு முடிகிறது.

சந்திப்பவர்களிடம் எடுக்கும் கருத்து தவிர எங்களுக்குள் சிலர் நாகரீகமாக வாக்குவாதப்படுவோம். ஒருபொழுதும் உங்களைப்போல கருத்து எழுதுவதற்கே பட்டங்கள் சொல்லி தூற்றுவது போல தூற்றியது கிடையாது.. கிடையாது. உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசமே அதுதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 11-10-2003

பட்டங்கள் கொடுப்பது நீங்கள் செய்யும் தொழிலைக் எழுதும் எழுத்தையும் கருத்திற் கொண்டு தான். மண் பற்றுடன் எழுதுங்கள் உங்களையும் தலை மேல் தூக்கி வைத்து போற்றலாம். நீஙகளும் நாகரீகமாய் எழுதுங்கள்.அதை விட்டு விட்டு கண்டதையும் கழியதையும் எழுதினால் பட்டங்கள் அப்படித் தான் கிடைக்கும். அப்படி பச்சோந்தித் தனமாக வாழ்ந்தால் தான் முன்னேறலாம் என்று ஒரு சிலருடைய கணிப்பு.

அன்புடன்
சீலன்

- Mathivathanan - 11-10-2003

ஐயா சீலன்.. கருத்தை கருத்தாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு வராது.. ஏன் வீண் விவாதம்.. நீங்கள தூற்றுமளவு தூற்றலாம்.. பிரச்சனையில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- suppiah suthanthararajah - 11-10-2003

:?: :?:

- suppiah suthanthararajah - 11-10-2003

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- S.Malaravan - 11-10-2003

எல்லாருக்கம் தெரியும் தானே உம்முடைய நண்பர்களும் உம்முடைய தொழில் தானே செய்வினம் சிங்கப்புூர் ஷ்ரவேல் என்று சொன்னியளே அப்ப விளங்குது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டையள்தான் என்ன கதைக்க முடியாம ஐயா போடுறியள் பெடியளோடை. எதுக்கு ஒன்றும் புரியேலை இதுகும் அவ்வழியோ?
:twisted: :twisted: :twisted:

- suppiah suthanthararajah - 11-10-2003

.ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட யூதர் சமுதாயதிற்காக அமெரிக்கா குரல் கொடுத்து இஸ்ரேல் உருவானது உண்மை.ஆனால் இன்று ஈழத்தமிழருக்காக மனத்தூய்மையுடன் குரல் கொடுக்க எந்த அரசாவது முன் வருமா ?நாடுகளோ வல்லரசுகளோ பூகோள நலன் அல்லது பொருளாதாரநலன் என்பதைத் தான் முதலில் சிந்திக்கின்றன..கிழக்கு தீமோரின் சுதந்திரத்திலே அவுஸ்திரேலியாவுக்கு ஆர்வம் இருந்தது.யூகோஸ்லவியா ஐரோப்பாவிலே இருக்கினறது.ஆனால் நாமோ?
சில செய்திகள் யதார்த்தத்திற்கு எதிராக இருக்கலாம்..அவற்றை வேடிக்கையாகவும் எடுக்கலாம்.கருத்துக்கள் முரணபடலாம்.ஆனால் கருத்தை எழுதுபவர்கள் முரணபடக்கூடாது.ஆகவே அன்பான சீலன்,மதிவதனன் அவர்களே!உங்கள் கருத்துக்களை மட்டும் மோதவிடுங்கள்.இது என வினயமான வேண்டுகோள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி இடைநிறுத்தம்-ஜ.எல்.பீரிஸ் .என்று, புதினம்(101103 )கூறுகின்றது.பேச்சு வார்த்தைகள் செய்யவே அரசியல் ஸ்திரம் போதவில்லை..இநத அரசு வேறு ஒருஅரசுடன் சேர்ந்து எமக்கு... :?: :roll:

- Mathivathanan - 11-10-2003

ஐயா சுதந்திரன்.. கற்பனைக்கோட்டைகளுக்கு அளவேது.. சமாதானம் என்று தற்போதுதான் ஏதொ நடக்கிறது.. சம்பந்தப்பட்வருக்கு வதிவிட உரிமை கிடைத்துவிட்டது. திரும்பிப்போவதென்பது கனவிலுமில்லை. ஆகவே அவரும் அவர் சார்ந்த பெடிசுகளும் வாங்கிய வக்காளத்துக்கு ஏதாவது சொல்லவேண்டும். அதுதான் அமெரிக்க ரணில் கூட்டு தமிழீழ கொடுப்பனவு.. அறிக்கை என எனது அபிப்பிராயம். எது எப்படியோ.. அவரைப்போல எத்தனையோ குடும்பங்கள் தற்போது.

பேச்சுவார்த்தை நடக்கிறதோ இல்லையோ சமாதானம் இருந்தாலேபோதும். இன்றுகூட அண்மையில் சென்றுவந்தவர் ஒருவரை சந்தித்தேன். சண்டைக்கு ஆதரவு இம்மியளவுமில்லை.. எனவே யார் எந்த அளவு சண்டைக்கு வக்காளத்து வாங்கினாலும்.. யார் கூப்பிட்டுவைத்து பிரகடணம்செய்து சண்டை சண்டை என்று கூக்குரலிட்டாலும் தோற்கப்போவது உண்மை. ஆயுதம் தரித்தவன் ஆயுதம் களைந்தால் அங்கீகாரம்.. வரவேற்பு.. உதவி கிடைக்கும். இல்லையேல் வானம்பார்த்த பூமிதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 11-10-2003

S.Malaravan Wrote:எல்லாருக்கம் தெரியும் தானே உம்முடைய நண்பர்களும் உம்முடைய தொழில் தானே செய்வினம் சிங்கப்புூர் ஷ்ரவேல் என்று சொன்னியளே அப்ப விளங்குது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டையள்தான் என்ன கதைக்க முடியாம ஐயா போடுறியள் பெடியளோடை. எதுக்கு ஒன்றும் புரியேலை இதுகும் அவ்வழியோ?
ஐயா என்பது கருத்து நாகரீகமாக எழுதும்போது கொடுக்கும் மரியாதை.. உங்களுக்கு வேண்டாமென்றால்.. ஐயா என்று எழுதியதை அடுத்தவன் இரத்தத்தில் உயிர்வாழும் புல்லுருவியே.. என எடுத்துக்கொள்ளலாம்.. எனக்குப் பிரச்சனையில்லை ஐயா..