09-16-2005, 05:30 AM
அந்த காலத்தில் மின்சார விளக்குகள் இருக்கவில்லை. மாட்டுவண்டில் தான் வாகனம். இருட்டிவிட்டால் சந்தியில் இருக்கும் புளியமரத்துக்கு கிட்ட யாரும் வரமாட்டார்கள். ஏன் பகலிலேயெ பலருக்கு அந்த வழியால் போகப்பயம். சில நேரம் இரவில் இந்த பக்கம் இருந்து விசித்திரமான சத்தங்கள், யாரோ அழுவது போல கூட கேட்கும்.
வீட்டிலே கலியாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. சோடனைகள் ஒரு புறம், சாப்பாட்டுக்கான ஆயத்தங்கள் மறுபுறம் என்று ஒரே ஆரவாரம். ஆனால் புளியமரத்துப்பக்கம் இருட்டின பிறகு யாரும் போவதில்லை.
<img src='http://www.math.buffalo.edu/~sww/s-b/ghost-tree.original.jpg' border='0' alt='user posted image'>
விடிய எழுந்து சமையல் அறைப்பக்கம் போனவர்களுக்கு அதிர்ச்சி. வடைகள் அடுக்கி வைத்திருந்த கடகத்தை காணவில்லை. எப்படி அந்த முழுக்கடகமும் வடைகளோடு காணாமல் போகும்? உறவினர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அதோடு எல்லாரும் ஏதோ தங்களுக்குள் குசு குசு வென்று கதை.
என்னவென்று போய் கேட்டால், புளியமரத்து சந்தியால் வந்தவர்கள், புளியமரத்து பேயை தாங்கள் கண்டதாக சொல்கிறார்கள். என்ன... இந்த பட்டப்பகலிலா?
இல்லை புளியமரத்திலே கடகம் ஒன்று இருக்கிறது. பேய்தான் அதைக்கொண்டு போய் வைத்திருக்கிறது என்று சொல்ல ... இப்ப வடை எங்க போனது என்று எல்லாருக்கும் புரிந்தது. புளியமரத்து பேய்தான் கடகத்தோடு வடைகளை கொண்டு போய்விட்டது. கலியாண வீட்டுக்கு பேய் வந்து போனது பற்றி எல்லோருக்குமே கலக்கம். இரவு அங்கே படுக்கவும் பலருக்கு நடுக்கம்.
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Sify%20Food/Vada2_M.jpg' border='0' alt='user posted image'>
இந்த கதையை சொன்னவர் எனது பாட்டனாரின் சகோதரர்.
புளியமரத்துக்கு கடகத்தோடு வடைகளை கொண்டு போய் இரவிரவாக தின்று தீர்த்தவர் வேறு யாருமல்ல அவரேதான்.