09-16-2005, 01:37 AM
மனிதர்
மஞ்சம் திருத்தி உடை
மாற்றி யணிந்தே கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதை அழைக்கையிலே
மிஞ்சிய சோகம் - மித
மிஞ்சிய அச்சம் என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ
நெஞ்சிலிவ் வாறு நினைந்
தங்குரைக் கின்றான் -அடி
பஞ்சைப் பரம்பரை நாமடிக் பிள்ளைகள்
பற்பலர் ஏதுக் கென்பான்
கஞ்சி பறித்தார் - உழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச்சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!
மஞ்சம் திருத்தி உடை
மாற்றி யணிந்தே கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதை அழைக்கையிலே
மிஞ்சிய சோகம் - மித
மிஞ்சிய அச்சம் என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ
நெஞ்சிலிவ் வாறு நினைந்
தங்குரைக் கின்றான் -அடி
பஞ்சைப் பரம்பரை நாமடிக் பிள்ளைகள்
பற்பலர் ஏதுக் கென்பான்
கஞ்சி பறித்தார் - உழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச்சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!

