Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவிலைத் தோரணம் ஏன்?
#14
ANUMANTHAN Wrote:வருமுன் காப்போம் ( இது எமது பழக்கவழக்களுக்கு காரணம்)

வரும்போது காப்போம் (இது எமது சுகாதார சீர்கேட்டின் விளைவால் வைத்தியசாலைக்கு போகும்போது)

எமது பழக்கவழக்கங்களில் எழுபது வீதமானவையும் தொற்று நீக்கிகள் கண்டுபிடிக்கப்படுமுன்னர் சுத்தம் பேணுவதற்காகவும்;, ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்டவையாகவே உள்ளன! சில மூடநம்பிக்கைகளுமுண்டு! தாயகத்தில் முன்பு இருந்தவர்களின் ஆயுட்காலங்கள் 80-90 வயதுவரை வாழ்ந்தவர்கள் அதிகம் இப்போ 60-70 வயதுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார்கள். தற்போது புலத்தில் எவ்வளவு சுத்தம் பார்க்கப்படுகின்றது. ஆனால் சாதாரண காலநிலை மாற்றத்திற்கே வருத்தம்வருகின்றது! இதேயளவு சுத்தம்பார்கப்படாத தாயகத்தில் எவ்வளவு திடகாத்திரமாக சுகமாக உள்ளார்கள். இங்கிருந்து தாயகம் செல்வோர் நாட்டில் மரக்கறிச்சந்தை மீன்சந்தைக்குள் போகவே மாட்டோம் என்கிறார்கள் ஆனால் அங்குள்ளவர்கள் அதற்குள்ளேயே வாழ்கிறார்கள் அவர்களுக்க எந்தநோயும் வருவதில்லையே!




அனுமந்தன் நீங்கள் எந்த புள்ளி விபரத்தின்படி இப்படிக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை?இலங்கையில் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே ஒழிய குறயவில்லை.
மற்றய விடயம் நோய் எதிர்ப்பு சக்தி சம்பந்தமானது.எமது உடலில் இருக்கும் நோய் எதிப்புச் சக்திக்கு மரபணுவின் தாக்கங்களும் உண்டு.அதனாலேயே ஒருவர் இடம் பெயரும் போது புதிய இடத்தில் உள்ள நுண்ணங்கிகளிற்கான எதிர்ப்புச் சக்தி அற்றவராக இருக்கிறார்.

மேலும் இயற்கையில் பல பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடியன.இவை பல ஆண்டுகள் கை வைத்தியமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்டு பயன்படுத்தப் படுகின்றன.இவை வெறும் பயன் பாட்டின் மூலமே பாவனைக்கு வந்தன.அவற்றின் பயன்பாடு சம்பந்த்மான அல்லது அவை வேலை செய்யும் முறமை சம்பந்தமான ஆய்வுகள் இன்றியே அவை வழக்கத்துக்கு வருகின்றன. அதனாலேயே சிலது வேலை செய்யும் சிலது வேலை செய்யா.

இதை வைத்துக் கொண்டு நாம் எதோ முன்னமே எல்லாத்தையும் கண்டு பிடித்து விட்டோம் என்று கூறுவது,எம்மை நாமே எமாற்றும் செயல்.அதுவும் இதற்கு சமய சாரம் பூசுவது,மேலும் எம்மை பின் நோக்கியே பார்க்கவைக்குமே ஒழிய.அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்பட விடா.
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 09-14-2005, 06:42 PM
[No subject] - by SUNDHAL - 09-15-2005, 03:06 AM
[No subject] - by RaMa - 09-15-2005, 04:48 AM
[No subject] - by அருவி - 09-15-2005, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 09-15-2005, 09:31 AM
[No subject] - by Thala - 09-15-2005, 10:14 AM
[No subject] - by Thala - 09-15-2005, 10:19 AM
[No subject] - by Thiyaham - 09-15-2005, 12:40 PM
[No subject] - by narathar - 09-15-2005, 12:58 PM
[No subject] - by narathar - 09-15-2005, 01:12 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 05:18 PM
[No subject] - by ANUMANTHAN - 09-15-2005, 06:19 PM
[No subject] - by narathar - 09-15-2005, 07:08 PM
[No subject] - by ANUMANTHAN - 09-16-2005, 04:40 PM
[No subject] - by narathar - 09-16-2005, 05:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)