![]() |
|
மாவிலைத் தோரணம் ஏன்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மாவிலைத் தோரணம் ஏன்? (/showthread.php?tid=3314) |
மாவிலைத் தோரணம் ஏன்? - SUNDHAL - 09-14-2005 மாவிலைத் தோரணம் ஏன்? கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள். - MUGATHTHAR - 09-14-2005 கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை - SUNDHAL - 09-15-2005 ப்hPத்திட்ட கேளுங்க சொல்லுவா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-15-2005 தென்னை ஒலை கட்ட இயலாது அது தான் மாவிலை கட்டினவார்கள். - அருவி - 09-15-2005 Quote:ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை உடைக்காக்டி சாப்பிடமுடியாது :wink: - MUGATHTHAR - 09-15-2005 <!--QuoteBegin-Aruvi+-->QUOTE(Aruvi)<!--QuoteEBegin-->உடைக்காக்டி சாப்பிடமுடியாது :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப தம்பி கோயிலடியிலைதான் சீவியம் போகுது போல...... - Thala - 09-15-2005 MUGATHTHAR Wrote:Aruvi Wrote:உடைக்காக்டி சாப்பிடமுடியாது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 09-15-2005 MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை முகத்தான் நான் அறிஞ்ச அளவில சொல்லுறன்.. மனிதனுக்கு இருக்கும் இரண்டு கண்ணேட மூன்றாவது கண்ணான அகக்கண்ணை திறத்தல்.. அதாவது மனித்யனுக்குள்ள இருக்கும் இளுக்காறு, அவா, இன்னாச்சொல். மூண்றையும் விடுவதாய் வேண்டி உடைக்கப் படும் தேங்காய்க்கும் மூன்று கண்கள்... இருக்கு.. அதன் வெண்பகுதியை கொண்டு வருவதுதான் நோக்கம்.. எனக்குத் தெரிந்த அளவில இதுதான் காரணம்.. மேலும் விரிவாயும் விளக்கம் இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thiyaham - 09-15-2005 MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை கற்பூரம் கொளுத்துவதும் மஞ்சல் தெளிப்பதும் (disinfection)தொற்று நீக்குவதற்கு.... - narathar - 09-15-2005 Thiyaham Wrote:MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை அப்ப இங்க ஆசுப்பத்திரியெல்லாம் உதுகளப் பாவிக்கலாம் தானே,உந்த வைத்தியர் மாருக்கும், நுண் உயிரியல் நிபுணர்களுக்கும் இதுகள் தெரியுதில்லை.சும்மா இந்த கண்ட கண்ட மருந்துகளைப் பாவிக்கினம்.அந்தக் காலத்திலேயே எங்கட ஆக்கள் எவ்வளவு முன்னேற்றமா இருந்திச்சினம்.எங்கள விட்டா கணணி,வலைப்பின்னல்,எல்லாம் கண்டு பிடிச்சிருப்பம். எப்பதான் இந்த பூசி மெழுகிற வேலய விடப் போறமோ? - narathar - 09-15-2005 விஞ்ஞான விளக்கம் சொல்லும் அறிஞ்ஞர் பெருமக்களே, நாங்கள் எப்போது இருந்து மாவிலை கட்டினோம்,எப்போது கரியமில வாயு கண்டு பிடிக்கப்பட்டது?எப்போது கற்பூரம் காட்டினோம் ,எப்போதில் இருந்து மஞ்ஞள் தெழித்தோம்?எப்போது நோய்களைப் பரப்புவது நுண் அங்கிகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டது தெரியுமா? நாம் இப்படியான விஞ்ஞானிகளாக இருந்தால் இன்று நாம் ஏன் இவ்வளவு பின் தங்கி உள்ளோம்? அப்ப அம்மை வருவது கடவுள் குற்றம் அல்லாமல் நுண் அங்கிகளாலா?எந்தத் தோத்திரத்தில் நுண் அங்கி பாடப்பட்டுள்ளது? - RaMa - 09-15-2005 நீங்கள் சொல்வது மிகவும் சரி நாரதர். எங்களுடைய மூததையார் கண்டு பிடித்த நவக்கிரங்களை வெள்ளைக்காரன் இப்போது தான் ஒவ்வொன்றாக கண்டு பிடித்துக் கொண்டு இருக்கினம். எங்களுடைய மூததையாருக்கு மட்டும் வசதி இருந்தால் எப்போதோ செவ்வாய் கிரகத்தில் நாய்களை அனுப்புவதற்கு பதிலா மனிதனை அனுப்பி அங்கு வாழவும் வழி செய்து இருப்பினம் - ANUMANTHAN - 09-15-2005 வருமுன் காப்போம் ( இது எமது பழக்கவழக்களுக்கு காரணம்) வரும்போது காப்போம் (இது எமது சுகாதார சீர்கேட்டின் விளைவால் வைத்தியசாலைக்கு போகும்போது) எமது பழக்கவழக்கங்களில் எழுபது வீதமானவையும் தொற்று நீக்கிகள் கண்டுபிடிக்கப்படுமுன்னர் சுத்தம் பேணுவதற்காகவும்;, ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்டவையாகவே உள்ளன! சில மூடநம்பிக்கைகளுமுண்டு! தாயகத்தில் முன்பு இருந்தவர்களின் ஆயுட்காலங்கள் 80-90 வயதுவரை வாழ்ந்தவர்கள் அதிகம் இப்போ 60-70 வயதுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார்கள். தற்போது புலத்தில் எவ்வளவு சுத்தம் பார்க்கப்படுகின்றது. ஆனால் சாதாரண காலநிலை மாற்றத்திற்கே வருத்தம்வருகின்றது! இதேயளவு சுத்தம்பார்கப்படாத தாயகத்தில் எவ்வளவு திடகாத்திரமாக சுகமாக உள்ளார்கள். இங்கிருந்து தாயகம் செல்வோர் நாட்டில் மரக்கறிச்சந்தை மீன்சந்தைக்குள் போகவே மாட்டோம் என்கிறார்கள் ஆனால் அங்குள்ளவர்கள் அதற்குள்ளேயே வாழ்கிறார்கள் அவர்களுக்க எந்தநோயும் வருவதில்லையே! - narathar - 09-15-2005 ANUMANTHAN Wrote:வருமுன் காப்போம் ( இது எமது பழக்கவழக்களுக்கு காரணம்) அனுமந்தன் நீங்கள் எந்த புள்ளி விபரத்தின்படி இப்படிக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை?இலங்கையில் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே ஒழிய குறயவில்லை. மற்றய விடயம் நோய் எதிர்ப்பு சக்தி சம்பந்தமானது.எமது உடலில் இருக்கும் நோய் எதிப்புச் சக்திக்கு மரபணுவின் தாக்கங்களும் உண்டு.அதனாலேயே ஒருவர் இடம் பெயரும் போது புதிய இடத்தில் உள்ள நுண்ணங்கிகளிற்கான எதிர்ப்புச் சக்தி அற்றவராக இருக்கிறார். மேலும் இயற்கையில் பல பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடியன.இவை பல ஆண்டுகள் கை வைத்தியமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்டு பயன்படுத்தப் படுகின்றன.இவை வெறும் பயன் பாட்டின் மூலமே பாவனைக்கு வந்தன.அவற்றின் பயன்பாடு சம்பந்த்மான அல்லது அவை வேலை செய்யும் முறமை சம்பந்தமான ஆய்வுகள் இன்றியே அவை வழக்கத்துக்கு வருகின்றன. அதனாலேயே சிலது வேலை செய்யும் சிலது வேலை செய்யா. இதை வைத்துக் கொண்டு நாம் எதோ முன்னமே எல்லாத்தையும் கண்டு பிடித்து விட்டோம் என்று கூறுவது,எம்மை நாமே எமாற்றும் செயல்.அதுவும் இதற்கு சமய சாரம் பூசுவது,மேலும் எம்மை பின் நோக்கியே பார்க்கவைக்குமே ஒழிய.அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்பட விடா. - ANUMANTHAN - 09-16-2005 நாரதரே! நான் எந்தவித புள்ளி அடிப்படையிலும் சொல்லவில்லை புள்ளிவிபரம் சேகரிக்க நேரமுமில்லைஇ எமது பகுதியில் தற்போது அங்குள்ளவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டோரை காண்பது மிக மிக குறைவு எந்த பெரியவர்களை விசாரித்தாலும் அவர்கள் இறந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். சுனாமிக்கு நாலு நாட்கள் முன்பு ஊருக்குபோனபோது ஏற்பட்ட ஏமாற்றம்தான் எனது அனுபவம் உங்கள் புள்ளிவிபரம் எனக்குதெரியாது! நோய் சம்மந்தமாக.. நாம் புலம்பெயர்ந்து இங்கும் எங்களுக்கு வருத்தம் வருகிறது அங்குபோனாலும் வருத்தம் வருகிறதே? அப்படியாயின் புலம்பெயர்ந்த எங்களுக்கு எதுவித நோய்எதிர்ப்பு சக்தியுமில்லாமல் போய்விட்டதென்றுகொள்ளலாமா? நான் எழுதியதுஇ சில பழக்கவழக்கங்கள் எம்மை சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள்அணுகாமல் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் என்பதே! அதே எனது கருத்து! இதில் சமய சாரம் புூசப்படுவதுதற்கு காரணம் வேறு! உதாரணம் சிறு பிள்ளைகளுக்கு சோறு ஊட்டும்போது பொக்காண்டி பிடிக்கும் என்று சொல்லி பிள்ளையை சாப்பிட வைத்துவிடுவார்கள்.அப்படி சாப்பிட்ட பிள்ளைக்கு இப்போ பொக்காண்டி என்றால் என்னவென்று விளங்கும். முன்னையகாலத்தில் மருந்துகள் இல்லாத நேரத்தில் இவற்றை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்காக காட்டப்பட்ட பொக்காண்டிதான் சமயசாரம். பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருந்கொண்டு தொற்றுநோய்கள் வந்தால் காப்பாற்ற உண்டாகும் சிரமங்களை தவிர்க்க முன்னோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். இவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும,; ஏதாவதொரு நல்ல விடயத்தை சொன்னால் யார் இலகுவில் ஏற்றக்கொள்கின்றார்கள்? இப்படியான கஷ்டங்களை போக்கவே எல்லா மதங்களிலும் சில பழக்க வழக்கங்கள் உருவாகின! அதையே இன்றும் கடைப்பிடிக்கின்றார்கள். எல்லா பழக்கவழக்கங்களும் சுத்தமாக இருக்கவும் இயன்றளவு நோய்வராது தடுக்க முனைகின்றனவேயொழய 100வீதம் நோய்வராதுஎன்றுகூறவில்லை! எனவே முற்றுமுழுதாக நோயற்ற வாழ்வு எப்படி வாழலாம் எனமுன்னோக்கி பார்ப்பதுதான் தற்போதய தேவை! அதைவிடுத்து மருந்து இருக்குது நோய்வந்தால் மருந்து சாப்பிடபோய்விடும் (வரும் போது காப்போம்) என்றில்லாமல் விஞ்ஞான வளர்ச்சிற்கேற்ப நாங்களும் வளர முயற்சி செய்யுங்கள். தேவையற்று சமயம் சாரம் என்று ஏன் கவலைப்படுகின்றீர்கள். இன்றும் பிள்ளைகளுக்கு சோறூட்ட பொக்காண்டி சொல்லவில்லையா? சமய சாரம்புூசாதீர்கள் என்று சொல்லிக்கொண்டு "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என சமயம் சார்ந்த பெயரில் ஏன் இன்னும்? பொதுவாக சில சொற்பதங்கள்! சமயம் - (இதற்குஒருகருத்து) சந்தர்ப்பம்-காலம் (முன்பு) மார்க்கம் - வழி (அவர்களுக்கு தெரிந்தவழி) ஆனால் மதம்மட்டும் பிடிக்காதவரை சரி. இவை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தால் மன்னிக்கவும். - narathar - 09-16-2005 ANUMANTHAN Wrote:நாரதரே! நான் எந்தவித புள்ளி அடிப்படையிலும் சொல்லவில்லை புள்ளிவிபரம் சேகரிக்க நேரமுமில்லைஇ எமது பகுதியில் தற்போது அங்குள்ளவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டோரை காண்பது மிக மிக குறைவு எந்த பெரியவர்களை விசாரித்தாலும் அவர்கள் இறந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். சுனாமிக்கு நாலு நாட்கள் முன்பு ஊருக்குபோனபோது ஏற்பட்ட ஏமாற்றம்தான் எனது அனுபவம் உங்கள் புள்ளிவிபரம் எனக்குதெரியாது! நீங்கள் ஒரு சிலர் இறந்ததை வைத்து ஒரு அனுமானத்திற்கு வந்துள்ளீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே புள்ளிவிபரங்களைப் பற்றிச்சொன்னேன். நாங்கள் ஒரு பொதுவான வியசத்தைப் பற்றிக் கதைக்கும் போது பரந்துபட்ட தரவுகளின் அடிப் படயில் கதைத்தாலே உண்மயான நிலவரம் தெரியும். அடுத்தது எனது பெயர் ,இதில் வேறு ஆராச்சியா?எதோ உறுப்பினர் ஆன போது தலைக்குள் வந்த பெயர்,இதப் பெரிய ஆராச்சீ செய்து வைக்கவில்லை,ஆகவே இதற்கும் நான் சொல்லும் கருத்துக்களுக்கும் சம்பந்தம் செய்ய வேண்டாம்.கருத்துக்களுக்கு பதில் கருத்தை முன் வைய்யுங்கள்,பேர் பற்றிய ஆராய்வு தேவயற்றது. மருத்துவ ரீதியாகச் சிந்தித்து செயற்படுவதே சுகாதாரத்திற்குச் சிறந்தது.மூட நம்பிக்கைகளின் அடிப் படயான கருத்துக்களே தேவயற்றவை என்று கூறினேன்.அடிப் படைச் சுகாதாரம் நோய்கள் வராமல் தடுக்கும். மேலே தொற்று நீக்கி சம்பந்தமாகச் சொல்லப்பட்டவை சமய சாரமாக இருந்ததாலேயே அவ்வாறு கூறினேன்.இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள். |