11-07-2003, 03:29 AM
உண்மையில் நான் இதை இளைஞர்கள் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்று தான் கூறுகின்றேன். 'சட்டில்'; பாதிக்கப்பட்டவர்களை என்; கண்கூடாக பலரைப்பார்த்து இருக்கிறேன். இந்த 'சட்' டைக் காட்டி யாழ் இணையம் யாரையும் கவர்ந்து இழுக்க வேண்டியது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. யாழ் இணையம் என்பது ஒரு வியாபார நோக்கத்துடன் ஆரம்பிக்கப்ட்டது அல்ல என்றே எண்ணுகிறேன். ஒரு நல்ல நூலகத்தில் ஒரு பாகத்தில் மது விற்பனை செய்வதுபோல இது இருக்கிறது. சட் இங்கு இருந்துதான் ஆகவேண்டும் என்றால் அதை ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்க வைக்கமுடியுமா? அப்படிச்செய்தால் சரிதான்.
யார் யார் இங்கே பதிவு செய்து உள்ளார்கள். அவர்களில் எத்தனைபேர் இங்கே தமது ஆக்கங்களை வெளியிட்டு உள்ளார்கள் எனப்பார்த்தால் இது புலப்படும்.
யார் யார் இங்கே பதிவு செய்து உள்ளார்கள். அவர்களில் எத்தனைபேர் இங்கே தமது ஆக்கங்களை வெளியிட்டு உள்ளார்கள் எனப்பார்த்தால் இது புலப்படும்.