09-15-2005, 03:20 PM
வானும் முல்லையும்
எண்ணங்கள் போலே - வரி
வெத்தனை கண்டாய் - இரு
கண்ணைக்கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்ள்
கூடிச் சுடர்தரும் வான்!
வண்ணங்களைப் போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை மின்னலை அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை
வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தாள்
மேல் முத்தை வான் சொரிந்தான் !
விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள் - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்pன் லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!
எண்ணங்கள் போலே - வரி
வெத்தனை கண்டாய் - இரு
கண்ணைக்கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்ள்
கூடிச் சுடர்தரும் வான்!
வண்ணங்களைப் போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை மின்னலை அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை
வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தாள்
மேல் முத்தை வான் சொரிந்தான் !
விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள் - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்pன் லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!

