09-15-2005, 04:59 AM
அணில்
கீச்சென்று கத்தி அணில்
கிளையொன்றில் ஒடிப் பின்
வீச்சென்று பாய்ந்து தன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்
ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் எடன்
பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்
மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் கொல்லர்
காய்ச்சும் இருப்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத்திலே
ஏச்சுகள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!
கீச்சென்று கத்தி அணில்
கிளையொன்றில் ஒடிப் பின்
வீச்சென்று பாய்ந்து தன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்
ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் எடன்
பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்
மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் கொல்லர்
காய்ச்சும் இருப்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத்திலே
ஏச்சுகள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!

