09-15-2005, 03:55 AM
<img src='http://img237.imageshack.us/img237/3023/trinco1501056hn.jpg' border='0' alt='user posted image'>
<b>நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
பார்பர்ணியம் பேசியே
பாதிக் காலத்தை விழுங்குவோரே
பாரும் உம் புறமுதுகை
படை படையாய் தெரியுது
பாழ்பட்ட நெஞ்சு கொள் அழுக்கு..!
பகட்டுக்குப் பேசியே
பழகிவிட்ட நீங்கள்....
அட..பழகும் மனிதருக்குள்
பண்பாடு காண்பதெப்போ
பண்போடு பழகுவதெப்போ..??!
"ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா"
பாடிய பாரதி
பார்பர்ணியன் வாரிசு...
பார்வைக்கு இன்று
புரட்சிக் கவி......
நாளை உங்களுக்கு
அவனே... இகழ்ச்சிப் பொருள்
பாழ்பட்ட நெஞ்சோடு
படிப்பது "சமூக வேதம்"..!
தெய்வந் தொழ
நியதி யார் வைத்தார்..??!
நீயாய் தேடி விட்டு
நீக்க மறந்து விட்டு
நீசர் என்று இகழுரைக்க
நினக்கு என்ன தகுதி...??!
நின்று தொழ....
தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!
நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....!</b>
<b>நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
பார்பர்ணியம் பேசியே
பாதிக் காலத்தை விழுங்குவோரே
பாரும் உம் புறமுதுகை
படை படையாய் தெரியுது
பாழ்பட்ட நெஞ்சு கொள் அழுக்கு..!
பகட்டுக்குப் பேசியே
பழகிவிட்ட நீங்கள்....
அட..பழகும் மனிதருக்குள்
பண்பாடு காண்பதெப்போ
பண்போடு பழகுவதெப்போ..??!
"ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா"
பாடிய பாரதி
பார்பர்ணியன் வாரிசு...
பார்வைக்கு இன்று
புரட்சிக் கவி......
நாளை உங்களுக்கு
அவனே... இகழ்ச்சிப் பொருள்
பாழ்பட்ட நெஞ்சோடு
படிப்பது "சமூக வேதம்"..!
தெய்வந் தொழ
நியதி யார் வைத்தார்..??!
நீயாய் தேடி விட்டு
நீக்க மறந்து விட்டு
நீசர் என்று இகழுரைக்க
நினக்கு என்ன தகுதி...??!
நின்று தொழ....
தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!
நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

