Yarl Forum
நெஞ்சம் பொறுக்குதில்லையே.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நெஞ்சம் பொறுக்குதில்லையே.... (/showthread.php?tid=3308)



நெஞ்சம் பொறுக்குதில்லையே.... - kuruvikal - 09-15-2005

<img src='http://img237.imageshack.us/img237/3023/trinco1501056hn.jpg' border='0' alt='user posted image'>

<b>நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....

பார்பர்ணியம் பேசியே
பாதிக் காலத்தை விழுங்குவோரே
பாரும் உம் புறமுதுகை
படை படையாய் தெரியுது
பாழ்பட்ட நெஞ்சு கொள் அழுக்கு..!
பகட்டுக்குப் பேசியே
பழகிவிட்ட நீங்கள்....
அட..பழகும் மனிதருக்குள்
பண்பாடு காண்பதெப்போ
பண்போடு பழகுவதெப்போ..??!

"ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா"
பாடிய பாரதி
பார்பர்ணியன் வாரிசு...
பார்வைக்கு இன்று
புரட்சிக் கவி......
நாளை உங்களுக்கு
அவனே... இகழ்ச்சிப் பொருள்
பாழ்பட்ட நெஞ்சோடு
படிப்பது "சமூக வேதம்"..!

தெய்வந் தொழ
நியதி யார் வைத்தார்..??!
நீயாய் தேடி விட்டு
நீக்க மறந்து விட்டு
நீசர் என்று இகழுரைக்க
நினக்கு என்ன தகுதி...??!
நின்று தொழ....
தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!

நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....!</b>


- shanmuhi - 09-15-2005

<b>தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!</b>

சிந்திக்க வைக்கும் வரிகள்.

நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
உதித்த எண்ணங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.


- jeya - 09-15-2005

நல்லாயிருக்கு குருவிகள் உங்கட கவிதை


- ப்ரியசகி - 09-15-2005

நல்ல கவிதை குருவி அண்ணா..


- வெண்ணிலா - 09-15-2005

குருவியண்ணா சிந்திக்க வைத்த கவிதை நன்றாக இருக்கு.

பார்பர்ணியம் பேசுயே



பேசியே என வரணும் என நினைக்கிறேன் அண்ணா


- அனிதா - 09-15-2005

கவிதை நல்லாயிருக்கு குருவி அண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 09-15-2005

கவியும் கவிக்கு பொருத்தமான படமும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் குருவிகாள்


- tamilini - 09-15-2005

Quote:தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!
சாத்தான்கள் செயல் கண்டு
நெஞ்சம் பொறுக்காது
பொங்கி வந்த கவிவரிகள் நன்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 09-15-2005

நல்ல வரிகள், குருவிகளே
அவர்களின் நோக்கம் எமது இடத்தில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கவேணும் அதை தேசிய சாயம் பூச வேணும், விடுதலை போருக்கு கேட்டபெயரை வரவைக்கவேணும் என்பது தான் . பிரித்தி என்னும் நபர் அவர் ஆரம்பித்த தலைப்பிற்குள் இன்று காலை இணைத்த செய்தியே அதற்கு சான்று.


- Mathan - 09-15-2005

கவிதைக்கு நன்றி,

இந்தியாவின் பார்பனிய எதிர்ப்பு வாதங்களும் அது தொடர்பான நடவடிக்கைகளும் இலங்கைக்கு பொருத்தமற்றவை என்பது எனது கருத்து, எமக்கு பொருத்தமில்லாத பார்ப்பனிய எதிர்ப்பு வாதத்தை நாம் ஏன் இலங்கைக்கு காவ வேண்டும்?


- SUNDHAL - 09-15-2005

இந்த கவிதை யாருக்கோ எளுதின மாதிரி இருக்கே...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழத்துக்கள் குருவி அண்னா..


- கீதா - 09-15-2005

நல்ல வரிகள் நன்றி


- vimalan - 09-15-2005

<b>பார்பர்ணியம்</b> பேசியே
பாதிக் காலத்தை விழுங்குவோரே"


<b>பார்ப்பணியம்</b> என்றால் என்ன?


- Senthamarai - 09-15-2005

நன்றி குருவிகள் காலத்திற்கு ஏற்ற கவிதை


- preethi - 09-16-2005

(இது ஒரு கவிதையில்லை. எனக்குத் தமிழில் அவ்வளவு புலமையில்லை. அதனால் எந்த விமர்சனத்தையும் எதிர்பார்க்கவில்லை. ஓருவரினதும் Kudos ஐயும் எதிர்பார்த்தோ அல்லது Political correctness க்காக நான் என்னுடைய கருத்தைச் சொல்லாமல் மறுத்து, யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியமில்லை. தூற்றூவார் தூற்றட்டும், எனக்குச் சரியாகப் படுவதை மறைக்காமல் சொல்கிறேன்., இந்தியாவிலென்றாலென்ன, இலங்கையிலென்றாலென்ன தமிழன், தமிழன் தான். இலங்கையிலுள்ள நாலு பார்ப்பான்களுக்காக அவர்கள் தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாட்டில் செய்யும் அட்டூழியங்களை எதற்காக மூடி மறைக்க வேண்டும். இங்குள்ள பலருக்கும் இந்தத் தளத்தில் பிரபலமாக, எல்லோராலும் விரும்பப் படுபவர்களாக இருக்க மட்டும் விருப்பம். அதனால் கும்பலில் கோவிந்தா போடுவது போல் யாராவது மாற்றுக் கருத்துச் சொன்னால் எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பது தான் வேலை. Like I am so scared, hahahhahha <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)


<b>சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!!!


தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.

தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.

உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்!

அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்!

தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.

தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.

பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்!

இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!
</b>


- kuruvikal - 09-16-2005

[quote][b]சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!!!

தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.

சுயநலம் கொண்டு
தமிழைப் பழிப்பவனை
தரதரவென்று
தரையில் போட்டிழுத்து
தாழ்த்தாதே
தமிழர் நிலை...!
அதுவல்ல தமிழர் தேவை..!

தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.

தாயைப் பழிப்பவன்
தாள் அறுத்து கண்டதென்ன
தமிழன் "தறுதலை" என்பதே..!

உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்..!

உரத்துச் சொல்லிவிட்டால்
உண்மையல்ல
உதாரணம் காட்டி விட்டால்
உதாரண புருஷர் அல்ல..!

அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்..!

அண்ணன் இளவரசனும் அல்ல
அன்னைக் களம் சாம்பிராச்சியமும் அல்ல
அன்னைத் தமிழை, தாயை
தேடிக் குரைக்கும் நாயை
கல்லாலடித்து காவாலியாகி
கலங்கி நிற்கும் எண்ணமும் இல்லை...!
நீசர் நீங்கள் தூவும்
நஞ்சு விழுங்கி
நீலகண்டன் ஆகி
நாசமாப் போகும் எண்ணமும் இல்லை..!
பகுத்தறிவுதான் மனிதனாய்
மிச்சம் உண்டு..!

தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.

தமிழை நீசம் என்றால்
நேசமாய்
சொன்னவன் பாஷையை
நீசம் என்று நிறுவிவை..!
நாசமாப் போ என்று
எட்ட இருந்து மண் தூவி
நா வீசாதே..
அது வீண்...!

தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.

தமிழரென்று சொல்லி
தரணியெங்கும் ஒழிந்துவிட்டு...
தமிழைப் பழிப்பவனை
தமிழ் மண்ணில் தவழவிட்டு
அந்நிய சுகத்தில் வாழ்ந்து கொண்டு
ஏன் வாய் வீரம்..!
தமிழ் மண் அழைக்கிறது
தமிழ் கரும்புலியாகி நில்லும்
தரமாய் தமிழில் எழுதி நில்லும்...!

பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்..!

தமிழனாய் பிறந்து
மாற்றானைத் தூற்றும்
தரமிழந்த நீவீர்
தமிழ் தாய் புதல்வருமல்ல
பாரதிக்கு நீவிர் நிகருமல்ல
பண்பட்ட
பகுத்தறிவு எங்கே உமக்குள்...!

இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!

வல்லமை என்று ஏதும் இல்லை
வாய்மை என்பது சொல்ல
வார்த்தைக்கு இடமிருக்கு
தமிழ் தந்த பண்பிருக்கு
தரமாய் நாலு வார்த்தை
தாய் தந்த வகையில் இருக்கு
அது சொன்னால் தற்புகழ்ச்சியாம்..!

மதி இழந்து
மாற்றானை இகழ்ந்து
மகுடம் சூட
தமிழ் தாய் சொல்லவில்லை
கொட்டும் முரசோடு
சொட்டும் குருதி தந்து
வீரத்தால் எழுது வரலாறு
அவளுக்குண்டு அந்தப் பெருமை
அதற்கு தலை வணங்கு
தற்புகழ்ச்சிக்கு தலை எடு..!
நீசம் என்று தீண்டாமை பரப்பி
மனித நேசம் இழந்து
மாக்களாய் வாழாது
"கூடி விளையாடு பாப்பா"
பாரதி சொன்னது நினைவில் வை
பாரதியை சுட்டு வைக்காதே..!


- Thala - 09-16-2005

குருவி நண்றி...

பலபேர் பாரதி என்ன சொன்னார் எண்டே தெரியாமல்.. அவரைதுணைக்கு கூப்பிடுவது வேடிக்கை... நீச பாஷசை எண்டு சொன்னவன் தமிழனா அவன் தெலுங்கன்... அது தெரியாம உது பினாத்து....


- அருவி - 09-16-2005

குருவிண்ணா நன்றி.


- preethi - 09-16-2005

Thala Wrote:குருவி நண்றி...

பலபேர் பாரதி என்ன சொன்னார் எண்டே தெரியாமல்.. அவரைதுணைக்கு கூப்பிடுவது வேடிக்கை... நீச பாஷசை எண்டு சொன்னவன் தமிழனா அவன் தெலுங்கன்... அது தெரியாம உது பினாத்து....

சங்கராச்சாரி ஒரு பார்ப்பான், தமிழ்ப் பார்ப்பான்களின் தலைவன் அவ்ர். பார்ப்பான்கள் தமிழரல்ல. அவர்களே தாங்கள் தமிழர் என்று கூறுவதில்லை. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பான்கள் தான். தமிழ்நாதத்தில் வரும் திருமகள் எழுதும் கட்டுரைகளை வாசியும், பார்ப்பனரின் தமிழ் எதிர்ப்பும், பார்ப்பனர்களை ஆதரிப்பது பாம்புக்குப் பால் வார்ப்பது என்பதையும் விளக்குகிறார்.

கனடாத் தமிழர்கள் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வு பெறத் தொடங்கி விட்டார்கள். நானும் இது நாள் வரை பார்ப்பான்களை எங்கட ஐயர் என்று நினைத்து, சாதி கூடாது என்று சொல்லிக் கொண்டே ஒரு சாதிக்கு ஆதரவளிக்கும் பல தமிழர்களைப் போல் தானிருந்தேன்.


- kuruvikal - 09-16-2005

preethi Wrote:
Thala Wrote:குருவி நண்றி...

பலபேர் பாரதி என்ன சொன்னார் எண்டே தெரியாமல்.. அவரைதுணைக்கு கூப்பிடுவது வேடிக்கை... நீச பாஷசை எண்டு சொன்னவன் தமிழனா அவன் தெலுங்கன்... அது தெரியாம உது பினாத்து....

சங்கராச்சாரி ஒரு பார்ப்பான், தமிழ்ப் பார்ப்பான்களின் தலைவன் அவ்ர். பார்ப்பான்கள் தமிழரல்ல. அவர்களே தாங்கள் தமிழர் என்று கூறுவதில்லை. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பான்கள் தான். தமிழ்நாதத்தில் வரும் திருமகள் எழுதும் கட்டுரைகளை வாசியும், பார்ப்பனரின் தமிழ் எதிர்ப்பும், பார்ப்பனர்களை ஆதரிப்பது பாம்புக்குப் பால் வார்ப்பது என்பதையும் விளக்குகிறார்.

கனடாத் தமிழர்கள் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வு பெறத் தொடங்கி விட்டார்கள். நானும் இது நாள் வரை பார்ப்பான்களை எங்கட ஐயர் என்று நினைத்து, சாதி கூடாது என்று சொல்லிக் கொண்டே ஒரு சாதிக்கு ஆதரவளிக்கும் பல தமிழர்களைப் போல் தானிருந்தேன்.

சரி அவர்கள் பார்ப்பர்ணர்களாக...தமிழ் பேச விரும்பாதவர்களாக இந்தியாவில்...எத்தனையோ மொழி பேசும் மக்களோடு மக்களாக வாழட்டும்...அதுக்கு இப்ப என்ன...???! ஈழத்தில் பார்ப்பர்ணன் என்று சொல்லி எவரும் இல்லை...கனடாவுக்க நீங்கள் தெருவுக்கு ஒரு சாதி வைச்சிருக்கிறியள் (அங்கையும் பார்பர்ணனே வந்து சாதி பிரிச்சவன்..வெள்ளைக்காரனோட சேர்ந்தும் திருந்தினியளா.... இல்லை...!) எண்டதும்...உங்கட பெடி பெட்டை...அங்கிலோ ஆபிரிக்கர்களோட சேருறதும் குற்றமில்ல...பார்பர்ணர்கள் தான் இப்ப கண்ணை உறுத்துதோ....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: Idea