09-14-2005, 07:27 PM
6) மக்கள் நிலை
(சிட்டு)
தென்னை மரதத்தில் சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஒடிய காதலி
போ போ என்றுரைக்கும்
வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கி அச் சேவலும்
செப்பும் மணிவாயால்
என்னடி பெண்ணே உயிர்
ஏகிடும் முன்னே நீ
என்னிடம் வா எனையாகிலும் கூப்பிடு
தாமதம் நீக்கி விடு
என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்ததே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையில் பாய்ந்தது
பின்னும் அழைக்கும் சிட்டு
(சிட்டு)
தென்னை மரதத்தில் சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஒடிய காதலி
போ போ என்றுரைக்கும்
வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கி அச் சேவலும்
செப்பும் மணிவாயால்
என்னடி பெண்ணே உயிர்
ஏகிடும் முன்னே நீ
என்னிடம் வா எனையாகிலும் கூப்பிடு
தாமதம் நீக்கி விடு
என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்ததே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையில் பாய்ந்தது
பின்னும் அழைக்கும் சிட்டு

