Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயகாந்த் புதிய கட்சி
#5
நடிகர் விஜயகாந்த் மன்ற மாநாட்டில் நடந்த ருசிகர சம்பவங்கள் வருமாறு:-

* மாநாடு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

* மாநாட்டில் ரசிகர்கள் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

* மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, விஜயகாந்த் படங்கள் காணப்பட்டது.

* மேடைக்கு காந்தி- காமராஜர் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

* மேடையின் ஓரத்தில் விஜயகாந்த் கும்பிட்டபடியும், இடது ஓரத்தில் கட்டை விரலை உயர்த்தி சவால் விடுவது போன்ற படங்கள் இருந்தது.

* மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகிகள் விஜயகாந்தை இதய தெய்வமே, வருங்கால முதல்வர், வாஞ்சி நாதன், கரிபால்டி என அழைத்தனர். அவ்வாறு அழைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.

* மாநாட்டு முதல் வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்கள் அமர்ந்து இருந்தனர்.

* பெங்களூரில் இருந்து வந்த சித்தர் யோகி சக்தி பாபாஜி சுவாமிகள் முன் வரிசையில் அமர்ந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்.

* மாநாடு தொடங்கியதில் இருந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டார். மேடையில் இருந்தபடி நிர்வாகிகளை உடனுக்குடன் அனுப்பி தொண்டர்களை ஒழுங்கு படுத்தினார்.

* மேடையில் விஜயகாந்தை தவிர திரை உலகை சேர்ந்த சிம்மாசனம் பட இயக்குனர் திருப்பூர் ஈஸ்வரன், துணை நடிகரும், விஜயகாந்தின் மெய்க்காப்பாளருமான விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

* மாநாடு நிகழ்ச்சிகள் கிரேன் காமிராக்கள் மூலம் படமாக்கப்பட்டு டிஜிட்டல் திரையில் ஒளி பரப்பப்பட்டது.

* மாநாடு தொடங்கும் முன்பு மேடை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் தொண்டர் படையினர் ஈடுபட்டனர். ஆனால் மாநாடு தொடங்கியதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை கவனித்தனர்.

* மாநாடு தொடக்கத்தின் போது ஏராளமான ரசிகர்கள் அமருவதற்காக நாற்காலியை நோக்கி வந்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை தொண்டர் படையினர் அமைதிபடுத்தினர்.

* விஜயகாந்தின் ராசி எண் மேடையிலும் பிரதி பலித்தது. அதாவது மேடையில் முதல் வரிசையில் 5 நாற்காலிகள் மட்டும் போடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்த், நிர்வாகிகள், ராமு வசந்தன், சுந்தர்ராஜன், ரவீந்திரன், விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

* மேடையில் கருப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும், மாநாட்டு மைதானத்தில் சிகப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

* மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக வந்திருந்தனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.

* விழா மேடையில் கட்சி பத்திரிகையாக "அன்பு விஜயகாந்த்'' என்ற பத்திரிகை அறிவிக்கப்பட்டது. அதன் முதல் பிரதியை விஜயகாந்த் வெளியிட்டார்.

* மாநாட்டு மேடையில் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்ததும் அதிர் வேட்டுகள் முழங்கின. ரசிகர்களின் கரவொலிகளும் விண்ணை பிளந்தன.

* மாநாட்டு பந்தலில் ரசிகர்கள் அமருவதற்காக பிளாஸ்டிக் தரை விரிப்புகள் தரையில் விரிக்கப்பட்டு இருந்தது.

* மன்றத்தின் கொடியே கட்சிக் கொடியாக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.

* கட்சி பெயரை அறிவித்ததும் விஜயகாந்துக்கு ரசிகர்கள் தங்க கிரீடம் சூட்டினர். அதோடு வெள்ளி செங்கோலையும், விஜயகாந்துக்கு வழங்கினார்கள்.

* கட்சி தொடங்கிய சில நிமிடத்தில் சென்னை மாவட்டம் சார்பில் கட்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மாநாட்டு மேடையில் வழங்கப்பட்டது.

* மாநாட்டு வளாகத்தில் ரசிகர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

* குடிநீர் வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டில் செய்யப்பட்டு இருந்தது.

* விஜயகாந்த் படம் வரைந்த கைக்குட்டைகள், கீ செயின்கள், படம் பொறித்த பேனாக்கள் விற்பனை செய்யப்பட்டது. அதனை மன்றத்தினர் ஆர்வமுடன் வாங்கினார்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:02 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:05 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:20 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)