Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயகாந்த் புதிய கட்சி
#2
எல்லோரும் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்: பெண்களை நம்பிதான் கட்சி தொடங்கினேன்- மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு



கட்சி பெயரை அறிவித்து விஜயகாந்த் பேசியதாவது:-

எனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் இந்த மாநாடு ஒரு சவால்.

இந்த சவாலை நீங்கள் எப்படி முறியடிப்பீர்கள் எப்படி அமைதி காப்பீர்கள் என்பதில்தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களும் இங்கு இருப்பார்கள். அவர்கள் தப்புத்தப்பாக வெளியே போய் சொல்ல காரணம் ஏற்பட்டு விடக்கூடாது.

இன்னும் சிறிது நேரம்தான் நீங்கள் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து கூடி இருக்கிறீர்கள். எல்லோரும் நம்மை திருப்பி பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அப்படி எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இங்கே கூடி இருக்கிறீர்கள்.

நான் மாலை 5 மணிக்குத்தான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேச இருக்கிறேன். உள்ளே ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறீர்கள். வெளியேயும் ஏராளமான ரசிகர்கள் நிற்கிறார்கள். எல்லோரும் மாநாட்டுக்கு உள்ளே வந்து அமர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

வெளியே நிற்கிற ரசிகர்களும் மாலையில் உள்ளே வந்து அமரும் வகையில் போலீஸ் உதவியுடன் ஏற்பாடு செய்வேன். நாம் யார் எப்படிபட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். இதற்குதான் இந்த மாநாடு.

கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும், என் மனைவியும் அடிக்கடி சிந்திப்போம். எனது நண்பர் பாலசுப்பிரமணியமும் இது பற்றி கடந்த 2 மாதங்களாக எழுதி, எழுதி பார்த்தார். ஆனாலும் சிலர் விஜயகாந்த் கட்சி பெயர் முடிவு செய்து விட்டு அதை அறிவிக்காமல் இருப்பதாக கூறினார்கள்.

உண்மையிலேயே நேற்று இரவுதான் இந்த பெயர் முடிவு செய்யப்பட்டது. மேலே உள்ள தெய்வம், உங்களது ஆசி ஆகியவற்றால்தான் இது முடிந்தது.

உண்மையிலேயே எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதுவரை பெயர் முடிவு செய்யாமல் இருக்கிறோமே என்று குழம்பிதான் போனேன்.

ஆனாலும் எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குலதெய்வம், திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரின் கருணையினால் நம் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அந்த பெயரை இதோ அறிவிக்கிறேன். (இவ்வாறு கூறியப்படி `தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்' என்று விஜயகாந்த் `மைக்'கில் மும்முறை உரக்க சத்தமிட்டு கூறினார்)

எத்தனையோ பெயர்களை வைத்து பார்த்தேன். ஆனாலும் இதுதான் சிறப்பாக இருந்தது. நான் தமிழக மக்களை நம்பி இருக்கிறேன். 90 சதவீதம் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிலும் 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம்தான் உள்ளது.

அந்த நம்பிக்கையில்தான் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறேன். மாநாட்டை 2 நாட்கள் நடத்த வேண்டியதுதானே என்று சிலர் கேட்டனர். எனது ரசிகர்கள் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள். அதனால்தான் ஒரு நாள் மாநாட்டை கூட்டி இருக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் கூறினேன்.

நாள் முழுவதும் மாநாட்டில் அவர்கள் இருப்பார்களா? என்று கேட்டனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், எனது ரசிகர்கள் நிச்சயம் என்னோடு இருப்பார்கள். அவர்கள் ராணுவம் போன்றவர்கள். எப்போதும் நான் சொல்வதை கேட்பவர்கள்.

"வீழ்வதும் நாமாக இருப்பினும் வாழ்வது தமிழகாக இருக்கட்டும்.''

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:02 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:05 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:20 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)