Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயகாந்த் புதிய கட்சி
#1
மிழ் திரை உலகின் முன்னணி நடி கர்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்க போவதாக கூறி வந்தார். இதனை தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டில் வெளியிடபோவதாகவும் அறிவித்தார்.

அதன்படி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரை திருநகரில் செப்டம்பர் 14-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருநகர் தோப்பூரில் பிரமாண்ட பந்தலும், தஞ்சை தோரணவாயிலும் அமைக்கப்பட்டன. பந்தலுக்கு முன்பு கொடிக்கம்பமும் நடப்பட்டது.

மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்தார். பசுமலை ஓட்டலில் தங்கி இருந்த அவர் குடும்பத்துடன் வந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டார்.

இன்று காலை மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் பசுமலை ஓட்டலில் இருந்து தனி பிரசார வேனில் மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். அவர்களை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

பின்னர் விஜயகாந்த் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார். அங்கு ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே காலை 7.20 மணிக்கு கொடி ஏற்றி வைத்தார். உடனே 14 வென்புறாக்களை வானில் பறக்க விட்டார்.

அதன் பின்னர் ரசிகர் மன்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன், கார்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர். காலை 9 மணி வரை சுமார் 1 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர்.

பலத்த கரகோஷத்துக்கு இடையே நடிகர் விஜயகாந்த் 9.35 மணி அளவில் "தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்'' என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

புதிய கட்சியின் பெயரை மாநாட்டு மேடையில் அவர் அறிவித்ததும் தொண்டர்கள் `தலைவர் கேப்டன் வாழ்க' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கை தட்டினர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முன்வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

வேட்டி துண்டு வாங்க போட்டா போட்டி

விஜயகாந்த் கட்சி கரை போட்ட வேட்டி, துண்டுகள் விற்பனை மாநாட்டு பந்தலில் `களை' கட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டனர்.

ராட்சத பலூன்

மாநாட்டு பந்தலில் விஜயகாந்த் கட்சி கலரு டன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு இருந்தது. அது வழக்காக பார்க்கும் பலூன்களை விட மிக பெரியதாக இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் அந்த பலூனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

டிக்கெட் வாங்க குவிந்த கூட்டம்

மாநாட்டில் பங்கேற்க ரசிகர்கள் ரூ.5 கொடுத்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் முன்பு 4 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக ரசிகர்கள் நீண்ட கிï வரிசையில் காத்து நின்றனர்.

முதல்வர்கள் பட்டியலில் விஜயகாந்த் பெயர்

தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பெயர் பட்டியல் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் கடைசியாக 2006 என்று எழுதப்பட்டு அதற்கு நேராக உள்ள கட்டத்தில் விஜயகாந்தின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

பிரசார வேனின் முன்னும், பின்னும் எம்.ஜி.ஆர். படம்

மாநாடு முடிந்ததும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக விசேஷ பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அந்த வேனில் தான் விஜயகாந்த் மாநாட்டு பந்தலுக்கு வந்தார். வேனின் முன்புறம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படம் ஒட்டப்பட்டு இருந்தது. வேனின் பின்புறம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் இணைந்து இருக்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

அலங்கார நாற்காலியை மறுத்த விஜயகாந்த்

மாநாட்டு மேடையில் தலைவர்கள் இருக்க பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மட்டும் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. இதை கண்ட விஜயகாந்த் அந்த நாற்காலியில் இருக்க மறுத்து விட்டார். தனக்கும் எல்லோரையும் போல பிளாஸ்டிக் நாற்காலியே போதும் என்று கூறினார். உடனே அலங்கார நாற்காலி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டது
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
விஜயகாந்த் புதிய கட்சி - by SUNDHAL - 09-14-2005, 02:57 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:02 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:05 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:20 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 03:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)