Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிரின் விலை இங்கே ஊசலாடுகின்றது
#13
<b>யாழ். குடாவில் சமுக வன்முறைகளுடன் தொடர்புடையோர், தூண்டி விடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - இளம்பரிதி </b>


யாழ். குடா நாட்டில் எதிரியாலும், எதிரிக்கு துணைநிற்கும் துரோக சக்திகளாலும், மக்களிடையே தூண்டிவிடப்படும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டோருக்கும், அதற்கு துணை நிற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ள விடுதலைப் புலிகள், இவ்வாறான சம்பவங்கள் தொடர இனியும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பளையில் தற்போது இயங்கிவரும் யாழ். மாவட்ட அரசியல்துறை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில், நாசகார சக்திகளால் திட்டமிட்ட முறையில் சமுக வன்முறைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. எதிரியாலும் எதிரிக்கு துணைநிற்கும் துரோகிகளாலும் தூண்டி விடப்பட்டிருக்கும் இந்த வன்முறைகள் மக்களின் இயல்பான வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த வன்முறைகள் இனியும் தொடர்வதை எம்மால் அனுமதிக்க முடியாது.

சமுக வன்முறைகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்வுக்கு குந்தகம் வளைவிக்க முயலும் நாசகாரிகளினதும், அவர்களுக்கு துணைபோவோரின் நடவடிக்கைகளும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(சங்கதி)



இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் தான் 13/10/2005 செவ்வாய்க் கிழமை அண்று அரசியல் பொறுப்பாளரினால் இந்த அறிக்கை விடப்பட்டதா???? வருங்காலத்தில் எல்லாம் தீர்க்கப் படும், என்று நம்பிறன்
::
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 09-13-2005, 11:27 AM
[No subject] - by Danklas - 09-13-2005, 11:31 AM
[No subject] - by MUGATHTHAR - 09-13-2005, 11:46 AM
[No subject] - by kurukaalapoovan - 09-13-2005, 12:10 PM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 12:18 PM
[No subject] - by Danklas - 09-13-2005, 12:26 PM
[No subject] - by Paranee - 09-13-2005, 01:12 PM
[No subject] - by Paranee - 09-13-2005, 01:15 PM
[No subject] - by Birundan - 09-14-2005, 12:33 AM
[No subject] - by Mathan - 09-14-2005, 07:38 AM
[No subject] - by Thala - 09-14-2005, 08:14 AM
[No subject] - by shanmuhi - 09-14-2005, 06:03 PM
[No subject] - by MUGATHTHAR - 09-14-2005, 06:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)