11-06-2003, 05:08 PM
குழப்புவது யார் ?குழம்புது யார் ?கூடாதவர் யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?
மூன்று அமைச்சுகள் கலைப்பு ;பாராளுமன்றம் இடை நிறுத்தம்:அவசரகாலநிலை பிரகடனம்.போர்நிறுத்தம் என்னவாகும்?பேச்சுவார்த்தை என்னவாகும்?என்று தமிழ்மக்கள் மட்டுமல்ல சர்வதேசசமூகமும் ஆர்வத்தோடு நோக்குகின்றன.கோயில்களில் குணடுவீசப்பட்ட போது கேட்காதவர்கள்,தேவாலயங்கள் சிதைக்கப்பட்ட போது சிந்திக்காதவர்கள் இன்று ஈழத்தையே பார்த்துக் கொண்டிர்கிறார்கள்.ஐ.நா செயலாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.அமெரிக்கத்தலைவர் புருவங்களுயர்த்துகின்றார்.ஐரோப்பிய ஒன்றியம் அஙகலாய்க்கின்றது.இந்தியா ஆச்சரியம் தெரிவிக்கின்றது. ஏன் இந்த உலகமே ஈழத்தைப் பார்த்துக் கொணடிருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இது எல்லாமே பழகிப் போனவை.மாவட்டம் மகாவட்டமாய்ப் போய்விட்டது.மாகாணம் புஸ்வாணமானது திம்பு பெரிய வம்பாய்ப் போனது "விடாக்கொண்டன் கொடாக்கண்டன்"என்ற தெற்கிலங்கை அரசியல் மாறும் வரை பேச்சுவார்த்தைகள் எல்லாம் பேசாமடந்தைகளே! .அரசியல் தீர்வென்பநு ஆகாயத்தாமரையே.இருந்தாலும் இன்றும், இபோதும் தமிழ் மக்கள் மட்டுமல்ல; தமிழீழ விடுதலைப்புலிகளும் சமாதானத்தையே விரும்புகிறார்கள்.ஊடகங்களின் தணிக்கை இனி ஏற்பட்டாலும் வன்னி ஊடகவியலாளர் மகாநாடு,மேற்குலக அக்கறை என்பன பெரிய வெற்றிகளே!
குழப்புவது யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?என்று தீர்க்கதரிசனத்துடன் செல்வன் சுதந்திரராஜா இளவரசன் சுவீடனில் நவ2002 இல் நடந்த மாவீரர் தின விழாவிலே ஒரு கவிதை மூலம் கூறியுள்ளார்.அதன் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
பகைவரை சேர்த்திடும் பக்குவம்
பாதகரை விரட்டிடும் தத்தவம்
சாணக்கியன் அறியாத சாணக்கியம்
சரித்திரம் போற்றிடும் சாமர்த்தியம்
ஆம்! தமீழவிடுதலைப் புலிகள்
மறைந்தடிக்கும் போராளிகள் மட்டுமல்ல
மரபு வழிப் போர் வீரர் மாத்திரமல்ல
அரசியல் சாணக்கியம், தீர்க்கதரிசனம் உள்ளவர்கள்.
உண்மை அறியாத ஊடகங்கள்
ஊடகஙகள் அறியாத பூடகங்கள்
வேடங்கள் மாறாத நாடகங்கள்
பாடங்கள் படிக்காத அரசுகள்
இவற்றை மாற்றி
ஏடுகள் அறிந்த செய்தி
நாடுகள் புரிந்த உண்மை
கிழக்கும் மேற்கும் சேர்ந்து
வழக்குப் பார்க்கும் விந்தை
இப்போ
நடுநிலை நாடு சேர்ந்து
அரசியல் தீர்வு வேண்டி
பேச்சு வார்தத்தை என்று
பேரம் பேசுவது வெற்றி
இனி
குழப்புவது யார்?குழமபுவது யார்?
கூடாதவர் யார்?கோடாரிக்காம்பாக மாறுவது யார்?
என நாளை உலகறிந்தால் நமக்கு அதுவும் ஒரு வெற்றியே
- சுதந்திரன்-
:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

