11-06-2003, 12:40 PM
அலைகளின் விமர்சனம் ஒரு பாமரனின் அதாவது சாதரண சினிமா ரசிகனின் பார்வையில் இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
அதற்கு உதாரணம் கதையில் ஆரம்பத்தில் வரும் பெண் யார் என கேட்டிருப்பது.
சாதராண இரசிகன் அப்படித்தான் எதிர்பார்ப்பான். கமல் கூட ஒரு படத்தில் இதை கிண்டல் பண்ணியிருக்கிறார்
சிங்காரவேலன் என்று நினைக்கிறேன்.
ஒரு சாதாரண இரசிகன் என்ன எண்ணி காத்திருப்பான். விக்ரம் வளர்ந்து தன் தாயை யார் என அறிந்து அவளுக்கு ஏன் அந்த நிலை என தெரிந்து.. பழிவாங்க புறப்படலாம் என்றே நினைப்பான். இதுதான் பல சினிமாவில் காட்டப்பட்டு வந்ததும்.
இதை விட்டு விலகி யதார்த்தம் என்ற ஒன்றில் நுழைந்து பார்த்தால். பிதாமகன் நெஞ்சத்தை சுடும் கண்ணீர் வரவவைக்கும். அவன் ஏன் இப்படி மிருகம் போல மாறினான். பிறந்தது சுடுகாட்டில் வளர்ந்தது வெட்டியானிடம். அப்படியானால் வெட்டியான்கள் எல்லோரும் மிருகமா? இல்லை.
அப்படியானால் இவன் ஏன் இப்படி???
இந்த கேள்விக்கு விடைதான் முதல் காட்சி.
பிறந்ததுமே தாய் இல்லை சொந்தங்கள் இல்லை வெட்டியானும் தனியாள் இவன் பார்க்கும் மனிதர்கள் பிணங்களும் அவற்றை சுமந்து வரும் மனிதர்களையும். அழுகை மட்டுமே அவன் அதிகம் சந்தித்தது.
அவன் மிருகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இசை என்றால் பாடல் மட்டுமல்ல என்று நினைக்கிறேன். பிண்ணணி இசையில் மனங்களை அதிரவைத்திருக்கிறார் இளையராஜா.
குறிப்பாக கஞ்சாக்காடு வரும் காட்சிகளிலும் இறுதிக்காட்சியிலும் இசையாலேயே சுூழ்நிலையை புரியவைத்திருக்கிறார்.
பாடல்களும் நன்றாக உள்ளது படத்தோடு சேர்ந்து பார்க்கும் போது.
சிறையில் விக்ரமை காப்பற்றப்போய் சுூர்யா போலிசிடம் இரத்தம் வருமளவிற்கு அடிவாங்கி திரும்புகிறார்.
இதுவரைக்கும் யாரிடமும் பேசாத சித்தன்
பரிவுகாட்டாத சித்தன் மிருகம் போலவே குணங்களை கொண்ட அவன்.. சுூரியா தனக்காக தான் அடிபட்டு வந்துள்ளான் என்பதை உணர்ந்து கிட்டவந்து சுூரியாவை குனிந்து பார்க்கிறாரே இந்த இடத்தில் இளையராஜா ஒரு பாடலை போட்டார் பாருங்கள்.. அந்த காட்சியும் பாடலும் சேர்ந்து உள்ளத்தை உருக்கி விட்டது.
சுூரியா அற்புதம் ஏமாற்று வேலை செய்பவன் எந்தளவுக்கு போலியாக மிகையாக பேசி ஏமாற்றுவானோ அதை நகைச்சுவையாகவும் இயல்பாகவும் பின்னியெடுத்துவிட்டார் மனிதர்.
லைலா இன்னொரு அற்புதமான நடிப்பு. சுூரியாவை பிணமாக பார்த்ததும் அழுகிறாரே ஒரு அழுகை எங்களையும் அழவைத்து விடுவாரோ என்று இருந்தது.
அவ்வளவு உணர்வான நடிப்பு.
படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே அருமையாக நடித்திருந்தார்கள். யாரும் படத்திற்கு அநாவசியமான பாத்திரப் படைப்பு இல்லை என்பது இன்னும் சிறப்பு.