09-12-2005, 08:16 PM
<b>என்று விடுதலை...</b>
பெண்ணே சீர் செய்ய வேண்டும்
அதற்கு முன் உன்னை யாரென்று
அடையாளம் காட்டிவிடு
வீதிக்கு வர இருக்கும் பெண்ணே
நீ வீட்டுக்குள் இருந்து கொண்டே
சாதித்துக் காட்டிவிடு
ஆணுக்கு பெண் சம உரிமையாம்
தயவு செய்து எதில் என்று
எங்களைப் போன்றவர்களுக்கு கூறமுடியுமா?
நியாயம் வேண்டி போராட எமக்கு
வலிமை இல்லாவிட்டாலும் எங்கள்
பேனாவிற்கும் வலிமை கிடையாதா என்ன?
உன் திறமையை வெளிப் படுத்தாமலே
நான்கு சுவர்களுக்குள் உனது
வாழ்க்கை என்றானதா?
அடி பெண்ணே எங்கே
தொலைத்தாய் உன் சுதந்திரத்தை
இன்னும் தேடிக்கிடைக்கவில்லையா?
இலட்சியம் இல்லாத பெண்ணாய்
வாழாதே வாழ்க்கை என்பது உனக்கு
வெறும் பொழுதுபோக்கு ஆகிவிடும்
சுதந்திரக் காற்று இனியும் எங்கள் பக்கம்
கொஞ்சம் வீசுமா? இல்லை புயலாகி
வந்து எம்மையே அழிக்குமா?
பெண்கள் ஆயுதம் ஏந்தி போர்க்களம்
இறங்கும் காலமடி பெண்ணே
நீ இன்னும் அடுப்பங்கரையிலா?
ஊமை கண்ட கனவு போல
உனக்குள்ளையே புழுங்கிச்
சாவதில் என்ன பயன்?
உதட்டில் மட்டும் தெரியும் பெண்ணின்
சிரிப்புக்கு பின் எத்தனை சோகக்
கதைகள் இருக்கின்றன
சோதனைகளை தோளில் சுமந்து
எங்கே செல்கிறாய் இந்த உலகத்தில்
இறக்கி வைக்க இன்னும் உன்னால் முடியவில்லையா?
விந்தை நிறைந்த இந்த உலகில்
பெண் நொந்து நூலாகிப்
போவது தான் வரலாறா?
தண்ணீரில் மூழ்கி விடாதே பெண்ணே
எதிர் நீச்சல் போட்டால் தான்
கரையை நீ அடைய முடியும்
உன் எதிர்காலம் உன் காலடியில்
தான் கிடக்கிறது உனக்குள் உறங்கும்
விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பு
வானவில்லுக்கு வர்ணம்
பூசும் இந்த உலகம் ஒரு விதவையின்
சேலையில் பூசட்டும்
அருவி ஓடுவதற்கு யாரிடம் அனுமதி
கேட்பது பெண்ணே கல் காயப்பட
மறுத்தால் சிற்பமாகாது அதை உணர்ந்துகொள்
இறந்த காலத்தை எண்ணி
எண்ணியே நீ நிகழ் காலத்தை
தொலைத்து விடாதே
பெண்ணே இருட்டுக்குள் வாழும்
உன்னை வெளிச்சத்துக்கு கொண்டு வா
வெளியுலகம் உன்னைப் பார்க்கட்டும்
மீண்டும் பாரதி பிறக்க வேண்டுமா?
பெண் விடுதலைக்காக கவி பாட
பாரதியே நீ மீண்டும் பிறந்து வா எமக்காக
- யாரோ
பெண்ணே சீர் செய்ய வேண்டும்
அதற்கு முன் உன்னை யாரென்று
அடையாளம் காட்டிவிடு
வீதிக்கு வர இருக்கும் பெண்ணே
நீ வீட்டுக்குள் இருந்து கொண்டே
சாதித்துக் காட்டிவிடு
ஆணுக்கு பெண் சம உரிமையாம்
தயவு செய்து எதில் என்று
எங்களைப் போன்றவர்களுக்கு கூறமுடியுமா?
நியாயம் வேண்டி போராட எமக்கு
வலிமை இல்லாவிட்டாலும் எங்கள்
பேனாவிற்கும் வலிமை கிடையாதா என்ன?
உன் திறமையை வெளிப் படுத்தாமலே
நான்கு சுவர்களுக்குள் உனது
வாழ்க்கை என்றானதா?
அடி பெண்ணே எங்கே
தொலைத்தாய் உன் சுதந்திரத்தை
இன்னும் தேடிக்கிடைக்கவில்லையா?
இலட்சியம் இல்லாத பெண்ணாய்
வாழாதே வாழ்க்கை என்பது உனக்கு
வெறும் பொழுதுபோக்கு ஆகிவிடும்
சுதந்திரக் காற்று இனியும் எங்கள் பக்கம்
கொஞ்சம் வீசுமா? இல்லை புயலாகி
வந்து எம்மையே அழிக்குமா?
பெண்கள் ஆயுதம் ஏந்தி போர்க்களம்
இறங்கும் காலமடி பெண்ணே
நீ இன்னும் அடுப்பங்கரையிலா?
ஊமை கண்ட கனவு போல
உனக்குள்ளையே புழுங்கிச்
சாவதில் என்ன பயன்?
உதட்டில் மட்டும் தெரியும் பெண்ணின்
சிரிப்புக்கு பின் எத்தனை சோகக்
கதைகள் இருக்கின்றன
சோதனைகளை தோளில் சுமந்து
எங்கே செல்கிறாய் இந்த உலகத்தில்
இறக்கி வைக்க இன்னும் உன்னால் முடியவில்லையா?
விந்தை நிறைந்த இந்த உலகில்
பெண் நொந்து நூலாகிப்
போவது தான் வரலாறா?
தண்ணீரில் மூழ்கி விடாதே பெண்ணே
எதிர் நீச்சல் போட்டால் தான்
கரையை நீ அடைய முடியும்
உன் எதிர்காலம் உன் காலடியில்
தான் கிடக்கிறது உனக்குள் உறங்கும்
விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பு
வானவில்லுக்கு வர்ணம்
பூசும் இந்த உலகம் ஒரு விதவையின்
சேலையில் பூசட்டும்
அருவி ஓடுவதற்கு யாரிடம் அனுமதி
கேட்பது பெண்ணே கல் காயப்பட
மறுத்தால் சிற்பமாகாது அதை உணர்ந்துகொள்
இறந்த காலத்தை எண்ணி
எண்ணியே நீ நிகழ் காலத்தை
தொலைத்து விடாதே
பெண்ணே இருட்டுக்குள் வாழும்
உன்னை வெளிச்சத்துக்கு கொண்டு வா
வெளியுலகம் உன்னைப் பார்க்கட்டும்
மீண்டும் பாரதி பிறக்க வேண்டுமா?
பெண் விடுதலைக்காக கவி பாட
பாரதியே நீ மீண்டும் பிறந்து வா எமக்காக
- யாரோ
<b> .. .. !!</b>

