09-12-2005, 01:10 PM
sinnakuddy Wrote:சர்ச்சைக்குரிய மீரா நாயரின் படம் ஓன்று பிரித்தானிய டிவியில போடுகிறார்கள் அதன் அறிவிப்பை போட்டிரு்ந்தேன்...அந்த அறிவிப்பை தடை செய்து நிர்வாக பகுதிக்கு உள் இழுத்தவிட்டார்கள். அந்தப்படம் என்ன ..நேரம் சனல் நாள் போன்றவற்றை யாரும் அறிய விரும்பின் என்னிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்
வணக்கம் சின்னக்குட்டி,
படம் குறித்த அந்த இணைப்பை பார்த்தேன். அது குறித்து வேலைப் நேரத்தில் உடன் விளக்கம் எழுத முடியாமையால் <b>தற்காலிகமாக</b> தலைப்பை நிர்வாகம் பகுதிக்கு மாற்றி அறிவிப்பும் செய்திருந்தேன். அதில் <b>தற்காலிகமாக</b> என்று குறிப்பிட்டிருந்ததை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். தற்போது நீங்கள் தனிமடல் மூலம் கேட்ட சந்தேகங்களுக்கும் அதன் மூலமே பதில் அளித்துள்ளேன்.
பிரித்தானிய தொலைக்காட்சிகளில் காமசூத்திரா ஒளிபரப்பாகவிருக்கும் நேரம் குறித்த விபரங்களை யாழ் களத்தில் இணைப்பதில் ஆட்சேபணை ஏதும் இல்லை, அதனால் அந்த தலைப்பை மீண்டும் சினிமா பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். ஆனால் இதனை தவறான முன்னுதாரணமாக கொண்டு அந்த படத்தில் வரும் காட்சிகளில் புகைப்படங்களையோ அல்லது அதன் காட்சிகளை வீடியோ வடிவிலோ களத்தில் இணைப்பதை விரும்பவில்லை. இது மற்றய வயது வந்தோருக்கான நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். யாழ் களத்தில் பல்வேறுபட்ட ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்று கொள்ளும் அதே வேளை இந்த தளம் 13 வயதுக்கு மேற்பட்ட யாரும் இணைந்து கருத்து எழுத கூடியமையாக உள்ளமையால் அதற்கேற்ப கருத்துக்களை அமைய வேண்டும் என்றும் விரும்புகின்றேன்,
நன்றி
நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

