09-12-2005, 09:14 AM
Vasampu Wrote:டண் உமது பதிலுக்கு நன்றிகள்<b>முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா???? </b>
பொதுவாக மனிதனுக்கு கோவம் வரும்பொழுது அவனுக்கு பக்கத்தில நிண்டுகொண்டு ஒரு கத்தியை கொடுங்க அவண்ட கையில,, ஆத்திரத்தில என்ன ஏது செய்கிறோம் எண்டு தெரியாமல் வெட்டினவங்களும் இருக்கிறாங்க,, உள்ளதுக்கேயே லண்டன்ல இளம் பராயத்தினர் ஒவ்வொரு குழுக்களாக திரிகின்றனர், பொதுவாக கால்பந்து, கிரிக்கட் போன்றவற்றால் சிலவேளை தகராறு என்று வரும் போது விக்கட், கொட்டனுகளால் சண்டை செய்துவிட்டு போய்விடுவார்கள்.. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையை குளைக்க சில பிரானிகள் புகுந்து ஒரு பிஸ்ரலை கையில கொடுத்து அவனன போடுடா மாமு எண்டு குடுத்தால், இளம் வயசு, இளம் ரத்தம், அத்தோடு குறூப் எண்டு வரும்பொழுது இதுதான் சிறந்த வழி எண்டு தென்படும்,,என்ன நடக்கும் அங்க??
<b>பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா??</b>
ஒரு நாட்டின் புலனாய்வு துறை என்பது சிறந்து அறிவாற்றல் திறமையை கொண்டு உருவாக்கப்படுவது, இப்படியானவர்கள் புலத்திலே தங்களின் செயற்பாடுகளை எல்லாம் ஆதரமாக விட்டுத்தான் செயற்படுவார்களா?? அண்மையில் லண்டனில ஒரு தமிழ் இளைஞனை 4 தமிழ் இளைஞர்கள் மிகக்கொடுரமாக நடு ரோட்டில் வைத்து கோடாரியினால் வெட்டி கொண்டார்கள் அறிந்திருப்பீர்கள்.. அச்சம்பவத்தை நீங்கள் தனி மனிதர் பிரச்சினை எண்டு எடுத்துக்கொண்டாலும், இதை ஏன் ஒரு சதி என்று என்னக்கூடாது,, ஒரு மனிதன் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும்பொழுது அவனுக்கு ஆதரவாக எந்த கெட்ட விடயங்களை சொன்னாலும் அது நல்லதாகத்தான் தென்படும்,,, :roll:
<b>வதந்திகளை பரப்பியாவது இலண்டனிலுள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம் தானே என எழுதியுள்ளீர். இது எவ்வளவு ஆபத்தானது இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில்லாமல்..</b>
இதன் விளைவு எப்படி இருக்குமெண்டு நீங்கள் நினைக்கின்றீர்கள்?? இப்படியான விடயங்களை தெரிந்துவைத்திருந்தால் என்னைபொறுத்தவரையில் நல்லது.. இது வதந்தியாக இருந்தாலும், இத்தோடு சம்பந்தப்பட்டவர்களூக்கு அது ஒரு செய்தி,, இது பற்றி அறியாமல் இருந்துவிட்டு பின்பு நிகழ இருக்கும் பின்விளைவுகளை எப்படிப்பட்ட ஆபத்துக்களாக அவர்கள் சந்திப்பார்கள்?? அண்மையில் கொல்லப்பட்ட அந்த இளைஞனை கொலை செய்தவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தீர்ப்பு வழங்கியது,, இவற்றுக்கும் அவர்கள் ஒவ்வொருவரின் வய்து 25, 30 தாண்டவில்லை.. அந்த கொலையை செய்ய தூண்டிய 4 பேருக்கும் இடையில் ஒருவன் புகுந்திருப்பான் என்று ஏன் ஒரு பக்கம் சிந்திக்ககூடாது???
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

