Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்?
#10
டண் உமது பதிலுக்கு நன்றிகள்

முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா???? பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா?? வதந்திகளை பரப்பியாவது இலண்டனிலுள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம் தானே என எழுதியுள்ளீர். இது எவ்வளவு ஆபத்தானது இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில்லாமல். இப்படி அடிக்கடி வதந்திகளை பரப்பி வந்தால் பின்பு உண்மையில் பிரைச்சினை இருந்தாலும் இதுவும் வதந்தி தான் என்றே நினைப்பார்கள். இதுவரை புலத்தில் எமது மக்களுக்கு எற்பட்ட பிரைச்சினைகள் யாவும் தாமே தமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டதால் வந்தவையே தவிர மற்றவர்களால் ஏற்பட்டவையல்ல. களத்தில் வெறும் அரட்டையை விட பிரயோசனமான விடயங்கள் விவாதிக்கப்படுவதை நானும் வரவேற்கின்றேன். ஆனால் சில அரைவேக்காடுகளின் சுயநலச் செயல்களாக தொடர்ந்தும் வதந்திகளைப் பரப்புவதைத்தான் நான் விமர்சித்தேன். இவர்களால் இந்த இணையத்தளத்தில் இப்படியான பரபரப்பு வதந்திகளையும் தனிநபர் தாக்குதல்களையும் தவிர என்ன பிரயோசனமான கருத்துக்கள் எழுத முடிந்தது. என்னை நான் மேதாவியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இப்போது தமிழிலுள்ள இணையத்தளங்களின் நம்பகத்தன்மையை நான் நன்கு உணர்ந்துதான் இருக்கின்றேன். அதனால்த்தான் யாழ் இணையத்தளமும் பத்தோடு பதினொன்றாவதை நான் விரும்பவில்லை. சமீபத்தில் இலண்டனில் நடைபெற்ற தாக்குதலையும் குறிப்பிட்டீர். அதற்கு யார் காரணம். பயங்கரவாதம் தோன்றுவதற்கு யார் வழி சமைத்தார்களோ அவர்கள் அதன் பலனை அனுபவிக்கின்றார்கள். இலண்டன் பொலிஸாரின் பயம் இயலாமை அவமானத்தினால்த்தான் ஒரு அப்பாவி இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். எந்த ஒரு நாடும் பிரைச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் காணாமல் எவ்வளவுதான் பாதுகாப்புகளை பலப் படுத்தினாலும் பயங்கரவாதத்தை ஒளித்துவிட முடியாது. இது கண் முன்னே நடக்கும் உண்மை. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும். புரியாத அரைவேக்காடுகளின் பதிலும் எனக்குத் தேவையில்லை.

:?: Idea :?: Idea Arrow
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-11-2005, 01:03 PM
[No subject] - by cannon - 09-11-2005, 02:32 PM
[No subject] - by Vasampu - 09-11-2005, 05:50 PM
[No subject] - by விது - 09-11-2005, 06:57 PM
[No subject] - by Anandasangaree - 09-11-2005, 09:36 PM
[No subject] - by AJeevan - 09-11-2005, 10:02 PM
[No subject] - by cannon - 09-11-2005, 11:03 PM
[No subject] - by Danklas - 09-11-2005, 11:20 PM
[No subject] - by Vasampu - 09-12-2005, 12:48 AM
[No subject] - by spyder12uk - 09-12-2005, 08:31 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-12-2005, 11:02 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 01:13 PM
[No subject] - by Vasampu - 09-17-2005, 01:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)