Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு போயா தினத்து மரணம் !
#1
[img<img src='http://img152.imageshack.us/img152/1769/p7ih.jpg' border='0' alt='user posted image'>]

சிறீலங்கா அரசால் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டாலும்இ சிறீலங்காவிற்கு வெளியால் பல விருதுகளை வெற்றி பெற்றுள்ளது ஒரு போயா தினத்து மரணம் என்ற சிங்களப்படம். போர் எப்படி சிங்கள மக்களின் வாழ்வை மாற்றியுள்ளது. போரினால் சிங்கள மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் சிங்கள அரசியல் நெருக்கடிகளுக்குள் துணிந்து பேசியுள்ளது. அதற்காக மேற்கண்ட பரிசுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது. மொத்தம் 75 நிமிடங்கள் கொண்ட இக்கலைப்படம் போரின் மறுபக்கத்தை வெளிக் கொண்டுவருவதில் கணிசமான பணியை ஆற்றியுள்ளதாகப் பேசப்படுகிறது. அரச ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை சிங்கள மக்கள் நிராகரிப்பதற்குரிய எதிர்வினையாகவும் இது செயற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



பிரசன்னா விதானகேயினால் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்து சிங்களப் படங்களில் நடித்துவரும் யோ.அபேவிக்கிரம முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய சிறந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.



படத்தின் கதைச்சுருக்கம்.



வன்னிகாமி என்ற முதியவர் கண் தெரியாத குருடர். இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பெண் திருமணம் செய்துவிட்டார்இ இன்னொரு பெண் திருமணத்திற்காகக் காத்திருக்கிறாள். ஒரு மகன் சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றுகிறான். பரம ஏழைகளான இவர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும்இ குறையில் கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும். திருமணமான சகோதரியின் கணவனின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரேயொரு ஆதராமாக இருப்பது வடக்கே இராணுவத்தில் உள்ள அவர்களுடைய மகனின் வருமானம்தான்.



இந்த நிலையில் ஒருநாள் மகனின் சவம் வாகனத்தில் வீடு வருகிறது. போரில் அவன் இறந்துவிட்டான்இ பிரேதம் சிறீலங்கா தேசியக் கொடியைப் போர்த்தியபடி வருகிறது. அந்தக்கிராமமே திரண்டுவிடுகிறது. ஆனால் அரச அதிகாரிகள் சவப் பெட்டியைத் திறக்கவோ மகனின் முகத்தைக் காணவோ அனுமதிக்கவில்லை. சவம் சிதைந்திருக்கலாம் என்பதால் திறக்க அனுமதிக்கப்படவில்லைஇ அடக்கம் செய்யப்படுகிறது.



இறந்துபோன இராணுவ மகன் அனுப்பிய கடிதமொன்று மறு நாள் வருகிறது. அதில் தான் விரைவில் வருவதாகவும்இ குறையில் உள்ள வீட்டைக்கட்டி தங்கையின் திருமணத்தை முடிப்பதாகவும் குருடனான தந்தைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறான்.



மரணம் முடிந்த காரணத்தால் அப்பகுதி கிராமசேவகர் இறந்து போன இராணுவத்தினர்க்குக் கொடுக்கப்படும் ஒரு இலட்சம் ரூபா சன்மானத்திற்கான படிவத்தை நிரப்பித்தரும்படி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் தனது மகன் உயிரோடு இருப்பதாக தான் நம்புவதாகவும்இ அப்படிவத்தில் கையொப்பமிட முடியாது என்றும் தகப்பன் கூறுகிறார். அதிலிருந்து பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன. பிள்ளைகள் அந்தப் படிவத்தை நிரப்பி பணத்தைப் பெற்றால்தான் தாங்கள் சந்தோசமாக வாழ முடியும் என்று போராடுகிறார்கள். கிராமவேசகரும் அதிலிருந்து தனக்கு வரக்கூடிய வருமதிக்காக தொடர்ந்து வந்து நெருக்கடி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் கடைசிவரை கைநாட்டு இடுவதற்கு மறுக்கிறார். தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறுகிறார். மகன் அனுப்பிய கடிதம் அவர் இறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டது என்பதையும் அவர் ஏற்கவில்லை.



இதற்கிடையில் இராணுவத்தினர் தமக்குள் பணத்தை சேகரித்துவந்து வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொடுக்கிறது. அதை அவர்கள் தகப்பனுக்கு தெரியாமலே வாங்குகிறார்கள். எங்களுக்கு இருக்கும் பணக்கஸ்டம் இந்தக்கிழவனுக்கு எங்கே தெரியப்போகிறதுஇ எங்களுக்கு இதைவிட்டால் வருமானம்வர வேறு வழியில்லையே என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இராணுவத்தில் சேருவதைவிட நாங்கள் பிழைப்பதற்கு இங்கு வேறு என்ன வழியிருக்கிறது என்று மூத்த மகளின் கணவன் கூறுகிறான்.



இதையெல்லாம் கேள்விப்பட்ட கிழவன் கவலைப்படுகிறான். இளைய பிள்ளைகளான உங்களால் வேறு எதைச் சிந்திக்க முடியும் ? இறந்தவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் பணத்திற்கு போராடுகிறீர்களே ? உங்கள் மீதும்இ உங்களது அறியாமை மீதும் எனக்கு வருத்தப்பட எதுவுமில்லை என்று தனக்குள் பேசிக்கொள்கிறான். மறுநாள் அதிகாலையே மண் வெட்டியுடன் தனது மகன் புதைக்கப்பட்ட இடத்திற்குப் போய் புதை குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறான். ஊர் திரண்டு வருகிறதுஇ கிழவனின் ஆவலைப் பூர்த்திசெய்ய எண்ணிய மற்றவர்களும் இணைந்து புதை குழியைத் தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார்கள்.



இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அந்தச் சவப்பெட்டியைத் திறந்தபோது அதற்க்குள் ஒரு வாழைக்குத்தியும்இ ஒரு கருங்கல்லுமே வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இறந்தவன் எங்கே ? ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள் ? எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி. அதற்குப் பின்னர் யாருமே எதுவும் பேசவில்லை. கிழவன் அமைதியாகச் சென்று ஆற்றில் தண்ணீர் அள்ளுகிறான். மழை வந்து அவனை நீராட்டுகிறது. இந்த அளுக்கான எண்ணங்களை எல்லாம் அது கழுவிச் செல்கிறது. சிறுவர்கள் நதியில் குளிக்கிறார்கள் காலநதியே அவர்களையும் கழுவிச் செல்ல வேண்டும் என்ற குறியீட்டுடன் படம் முடிவடைகிறது.



படத்தில் வரும் முக்கிய குறியீடுகள்.



அந்தக் கிராமத்தில் இராணுவம் துப்பாக்கியுடன் மிதிவண்டியில் போகிறது. அதே மிதி வண்டியின் முன்புறத்தில் புத்தபிக்கு ஒருவர் அமர்ந்திருக்கிறார். ஆகவே இராணுவத்திற்கும் புத்தபிக்குவிற்கும் பேதம் எதுவும் இல்லை. இருவரும் ஒன்றே என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.



இறந்தவருக்கு நிதி கிடைக்கிறது என்பதை அறிந்ததும்இ புத்தபிக்குவின் தலைமையில் மற்றயவர்களும் சேர்ந்து இறந்தவனின் பெயரில் ஒரு பஸ்தரிப்பிடம் கட்டவிரும்புவதாக வருகிறார்கள். இறந்தவனின் பணத்தை குடும்பம் மட்டுமல்ல சமுதாயஇ மதஇ அரச தாபனங்கள் முதல் பேயோட்டும் மந்திரவாதிகள்வரை பயன்படுத்தத் துடிதுடிக்கிறார்கள்.



வெறும் சேற்று நீரையே வடிகட்டி குடித்து வரும் அக்கிராமத்தில் போர்பற்றி எதுவும் புரியப்பட்டதாக இல்லை. வறுமையே இராணுவத்திற்குள் இளைஞர்களைத் தள்ளுகிறது. உழைத்துஇ கொள்ளையடித்து ஏதோ ஒரு வகையில் வாழ வேண்டுமெனவே அவர்கள் இராணுவத்திற்கு வருவதாக கதை சுட்டிக்காட்டுகிறது.


இதில் மிக முக்கியமான குறியீடு சவப்பெட்டிக்குள் கிடப்பது வாழைக்குற்றி என்று தெரிந்த பின்னர் முழுச்சமுதாயமுமே கோபத்தில் எதையாவது பேசுவதுதான் திரைப்பட மரபு. ஆனால் யாருமே வாயினால் ஒரு வார்த்தைகூட அதைப்பற்றி விமர்சிக்கவில்லை. உறைந்த மௌனத்துடன் வாய் பேசாமல் மறுபடியும் சவப்பெட்டியைப் புதைக்கிறார்கள். ஒரு சமுதாயமே உண்மையை புதை குழிக்குள் போட்டு மூடிவிட்டு எதுவுமே பேசாமல் வாழ்ந்துவருவதை சொல்லப்படாத காட்சிகளாக விளக்குகிறது.



படப்பிடிப்பு



மிகச் சாதாரணமான படப்பிடிப்பும்இ குறைவான தொழில் நுட்பமுமே கையாளப்பட்டிருக்கிறது. கமேரா மிகவும் மெதுவாகவே படத்தை நகர்த்துகிறது. வர்த்தகத்திற்கு பயன்படாத பரிசுகளுக்கு உரிய கலைப்படம் என்னும் ரகத்திற்குட்பட்ட திரைப்படமாகவே அது உருவாக்கப்பட்டிருக்கிறது.



உரையாடல்



மிகவும் சுருக்கமான இரண்டொரு வசனங்களே பேசப்படுகின்றன. படத்தின் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்றய மொழி பேசுவோரும் அதை விளங்க முடிகிறது.



தொகுப்பு.



இதுபோல மகனைக் காணாது தேடும் ஒரு தந்தையின் கதையை விளக்கும் மலையாளப்படமொன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்து பல பரிசில்களைப் பெற்றிருக்கிறது. அதேபோல இந்தப்படத்தின் கதை நகர்வும் இருக்கிறது. எடிட்டிங் இந்தியாவில் இருந்து ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறீலங்கா பாராளுமன்றத்தில் கேட்கும் போர்ச் சன்னதமும்இ ஊர்வலங்களும் ஏழைச் சிங்கள மக்களின் உண்மையான குரல்அல்ல அவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம் என்பதை திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. பார்க்க வேண்டிய படம்.

கி.செ.துரை அலைகள் திரை விமர்சனக் குழு. 24.07.05
நனறி
http://www.alaikal.com/net/index.php?optio...id=23&Itemid=41
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஒரு போயா தினத்து மரணம் ! - by விது - 09-11-2005, 07:43 PM
[No subject] - by narathar - 09-11-2005, 08:01 PM
[No subject] - by அகிலன் - 09-11-2005, 10:05 PM
[No subject] - by narathar - 09-11-2005, 10:42 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-11-2005, 11:51 PM
[No subject] - by MUGATHTHAR - 09-12-2005, 06:12 AM
[No subject] - by vasanthan - 09-12-2005, 07:15 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:20 AM
[No subject] - by tamilini - 09-12-2005, 08:27 AM
[No subject] - by MUGATHTHAR - 09-12-2005, 08:39 AM
[No subject] - by Mathan - 09-12-2005, 08:49 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:55 AM
[No subject] - by AJeevan - 09-12-2005, 10:04 AM
[No subject] - by AJeevan - 09-12-2005, 11:07 AM
[No subject] - by Mathan - 09-12-2005, 02:01 PM
[No subject] - by கீதா - 09-12-2005, 02:53 PM
[No subject] - by vasisutha - 09-13-2005, 01:43 AM
[No subject] - by MUGATHTHAR - 09-13-2005, 08:43 AM
[No subject] - by Rasikai - 09-13-2005, 08:28 PM
[No subject] - by Rasikai - 09-13-2005, 08:30 PM
[No subject] - by AJeevan - 09-13-2005, 10:37 PM
[No subject] - by AJeevan - 09-15-2005, 12:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)