09-10-2005, 07:26 AM
உடைக்கட்டுப்பாட்டை எதிர்த்து கையெழுத்து வேட்டை
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050901161658students203.jpg' border='0' alt='user posted image'>
<b>சென்னை மாணவிகள்</b>
அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான உடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக இடதுசாரி பார்வையுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளிடன் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள்.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உடைக்கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல என்றும், பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது ஒரு ஆணாதிக்கச் சிந்தனை என்று அந்த மாணவர் சங்கத்தினர் கூறுகிறார்கள்.
அடிப்படையிலான கல்விப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காகவே துணை வேந்தர் இந்த புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கையெழுத்து வேட்டைக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளதகாவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதேவேளை பொறியியற்கல்வி நிர்வாகங்களின் மத்தியில் இந்த உடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவு பெருகிவருவதையும் காணக்கூடியதாக இருப்பதாகக் கூறுகிறார் எமது சென்னைச் செய்தியாளர்.
இளம்பிபராயத்தில் ஆண் மாணவர்களுடன் படிக்கும் போது இப்படியான உடைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.
BBC tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>