09-09-2005, 11:12 PM
காலை
-------
ஒளியைக் கண்டேன் கடல்மேல்- நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின்- கதிர்
நிறையக் கண்டேன் உவகை!
துளியைக் கண்டேன் முத்தாய்க்- களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே
-------
ஒளியைக் கண்டேன் கடல்மேல்- நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின்- கதிர்
நிறையக் கண்டேன் உவகை!
துளியைக் கண்டேன் முத்தாய்க்- களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே

