Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள்
#10
சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தா திடீர் நீக்கம்?: எச்சரிக்கை கடிதம் அனுப்பினார் சந்திரிகா!!
[வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005, 19:57 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசியல் புதிய திருப்பமாக சுதந்திரக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச நீக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.


இது தொடர்பான எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை மகிந்த ராஜபக்சவுக்கு கட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க அனுப்பியுள்ளார்.

அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிங்களப் பேரினவாத ஜே.வி.பியுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தம் நேற்று வியாழக்னிழமை கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில மணிநேரங்களிலேயே சந்திரிகா குமாரதுங்க தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதத்தை நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார்.

அக்கடிதத்தில் அதிகாரப் பகிர்வைக் கைவிடுதல், ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட ஜே.வி.பியின் நிபந்தனைகளை மகிந்த ராஜபக்ச ஏற்றுள்ளது குறித்து சந்திரிகா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் சந்திரிகா தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலும், அமைச்சரவையாலும், பிரதமராகிய உங்களாலும் (மகிந்த ராஜபக்சவாலும்) அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை, நிராகரிப்பதற்கு ஒருதலைப்பட்சமாக ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்கள்.

உங்களின் அனைத்து செயற்பாடுகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்கை மீறுவதாக உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

கட்சி ஒழுங்கை மகிந்த ராஜபக்ச மீறுவதாக சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ள விடயம் தென்னிலங்கை அரசியலில் மேலும் திருப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 09-05-2005, 09:59 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:01 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:02 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:03 PM
[No subject] - by RaMa - 09-06-2005, 04:53 AM
[No subject] - by வினித் - 09-07-2005, 10:51 AM
கட்சியிலிருந்து மகிந்தா நீக்கம்?: - by வினித் - 09-09-2005, 04:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)