Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
#1
வவுனியாவில் இனந்தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மொகமட் ராஃபீக் (வயது 41) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


வவுனியாவின் 2 ஆம் குறுக்குத் தெருவில் இன்று முற்பகல் 11.10 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

9 குண்டுகள் பாய்ந்த நிலையில் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் ராஃபீக்கின் உடலைக் கைப்பற்றினார்கள். வவுனியா நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டர்.

வவுனியா சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ஏ.எம்.சி. அபயசிங்க பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கூடுதலாக சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
[[size=7]color=red]puthinam[/color]
Reply


Messages In This Thread
வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை - by mayooran - 09-09-2005, 09:45 AM
[No subject] - by sri - 09-09-2005, 11:07 AM
[No subject] - by வியாசன் - 09-09-2005, 11:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)