09-09-2005, 04:34 AM
sathiri Wrote:இதற்கு மேலும் ரெலோவுடன் கதைத்து பிரயேசனமில்லை என் நினைத்த புலிகள் ஒரு தாக்குதல்முலம் முரளியையும் காககாவையும் மீட்க முடிவு செய்கின்றனர். தாக்குதலின் இறுதியில் சபாரத்தினமும் கொல்லபடுகிறார்.
அந்த நாட்களிலே முரளியோடு நாளும் பழகும் சந்தர்ப்பம் இருந்தது. இப்படியான சம்பவம் நடந்ததாக அறியவில்லை. ஆனால் ரெலோ தாக்குதலுக்கு பிறகு குளம்பி போயிருந்த பொது மக்களுக்கு சந்தி சந்தியாக கூட்டம் வைத்து பொறுப்பாளர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் சொன்னது இதுதான்.
"களவெடுத்ததுக்காக நாங்கள் ரெலோவை அடிக்கவில்லை. இந்தியா எங்கள் எல்லா அமைப்புகயும் இந்திய இராணுவத்;தை அழைப்பதாக கையெழுத்து போட்டு தருமாறும் அதற்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டது. ரெலோ அதற்கு உடன்பட்டு இருக்கிறது. இதற்காக தான் ரெலோவை அடித்தோம். இந்தியா இங்கு வந்தால் இந்த நாடு அழிந்து போகும். எங்களுக்கு அது வேண்டாம்."
இந்திய இராணுவம் வந்த பிறகு அவர்கள் ரெலோவில் இருந்தவர்கள் வீடுகளுக்கு போய் அவர்கள் எங்கே என்று விசாரித்தார்கள். வெளிநாட்டுக்கு போய்விட்டார் என்று சொன்னால் எப்படி அறிவிக்காமல் போவார்? அவர் எங்கள் இராணுவத்தின் ஒரு பிரிவில் வேலை செய்கிறார். இப்படி நினைத்த படி எல்லாம் போக முடியாது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது ரெலோ இந்திய இராணுவத்தின் ஐந்தாம் படை எனப்படும் கூலிப்படை.
ரெலோ மீதான தாக்குதல் ஒரு முகாமில் மட்டும் நடந்த தாக்குதல் அல்ல. வடக்கு கிழக்கில் இருந்த அனைத்து ரெலோ முகாங்களும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கப்பட்ட்டன.
சபாரத்தினம் போராடி கொல்லப்படவில்லை. அவர் ஒழிந்திருந்த முகாமை கண்டுபிடித்து அவரை தேடி விடுதலைப்புலிகள் அனுப்பப்பட்டார்கள். சபாரத்தினம் இவர்களை கண்டு பயந்து வயலவெளிக்குள்ளால் ஓடிய போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
[quote=sathiri]
<span style='font-size:25pt;line-height:100%'>இது அழிப்பு யுத்தமல்ல மீட்பு யுத்தமே</span>
அதிலே சந்தேகம் இருப்பதனாலா திரும்ப திரும்ப எழுதி பார்த்து ஞாபகப்படுத்தி கொள்கிறீர்கள்?

