Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான
#1
அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடமாக தலாதா மாளிகையே சிறந்தது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் தமிழ் மக்களிற்குமிடையே ஒரு பேச்சு எதிர்காலத்தில் நடைபெறுமாக இருந்தால் பேச்சுக்கான இடமாக நோர்வே தரப்பு தலதா மாளிகையை தெரிவு செய்வதே சிறந்தது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமாதானப்பேச்சுகள் என்று பேச்சளவில் மட்டும் பேசியே கடந்த காலத்தை வெற்றிகரமாக இலங்கை அரசு நகர்த்தியுள்ளது. தற்போது நரிக்கொம்பாக இருக்கும் இந்த அரசாங்கத்தின் பேச்சுக்கான இணக்கப்பாட்டை நம்பி பேச்சுவார்த்தை மேசையை எங்கே வைப்பது என்று கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த நோர்வே அரசு தற்போது கொழும்பு சர்வதேச விமானநிலையத்தை தெரிவு செய்துள்ளது. ஒஸ்லோவில் பேசலாம் என்ற கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு அதற்கு மாற்றீடாக ஒமந்தை யுத்த சூனிய பிரதேசத்தை தெரிவுசெய்தது. இதனையடுத்து சிங்களத்தின் சுூனியத்தை நிராகரித்த தமிழ் மக்கள் சிங்கள படைகள் முடக்கப்பட்டு தமிழ் மண்ணில் மண்டியிட்ட கிளிநொச்சியில் பேசுவோம் என்று அறிவித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இந் நிலையில் இழுபறிப்பட்ட பேச்சுவார்த்தைக்கான இடத்தினை தெரிவுசெய்யும் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த நோர்வேத் தரப்பு தற்போது சிங்கள படைகள் தனது நிலத்தில் மீண்டும் தமிழரிடம் மண்டியிட்ட கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை தெரிவுசெய்துள்ளது. இவற்றை எல்லாம் விடுத்து நோர்வே தரப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உறைவிடமாக உள்ள தலதா மாளிகையில் சமாதானத்தை பேசுவதன் மூலம் பௌத்த பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்டு நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளை கண்டறியலாம் என்று அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

nitharsanam.com
Reply


Messages In This Thread
அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான - by விது - 09-08-2005, 04:45 AM
[No subject] - by RaMa - 09-08-2005, 04:49 AM
[No subject] - by Mathan - 09-08-2005, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)