![]() |
|
அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான (/showthread.php?tid=3393) |
அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான - விது - 09-08-2005 அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடமாக தலாதா மாளிகையே சிறந்தது. சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் தமிழ் மக்களிற்குமிடையே ஒரு பேச்சு எதிர்காலத்தில் நடைபெறுமாக இருந்தால் பேச்சுக்கான இடமாக நோர்வே தரப்பு தலதா மாளிகையை தெரிவு செய்வதே சிறந்தது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமாதானப்பேச்சுகள் என்று பேச்சளவில் மட்டும் பேசியே கடந்த காலத்தை வெற்றிகரமாக இலங்கை அரசு நகர்த்தியுள்ளது. தற்போது நரிக்கொம்பாக இருக்கும் இந்த அரசாங்கத்தின் பேச்சுக்கான இணக்கப்பாட்டை நம்பி பேச்சுவார்த்தை மேசையை எங்கே வைப்பது என்று கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த நோர்வே அரசு தற்போது கொழும்பு சர்வதேச விமானநிலையத்தை தெரிவு செய்துள்ளது. ஒஸ்லோவில் பேசலாம் என்ற கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு அதற்கு மாற்றீடாக ஒமந்தை யுத்த சூனிய பிரதேசத்தை தெரிவுசெய்தது. இதனையடுத்து சிங்களத்தின் சுூனியத்தை நிராகரித்த தமிழ் மக்கள் சிங்கள படைகள் முடக்கப்பட்டு தமிழ் மண்ணில் மண்டியிட்ட கிளிநொச்சியில் பேசுவோம் என்று அறிவித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இந் நிலையில் இழுபறிப்பட்ட பேச்சுவார்த்தைக்கான இடத்தினை தெரிவுசெய்யும் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த நோர்வேத் தரப்பு தற்போது சிங்கள படைகள் தனது நிலத்தில் மீண்டும் தமிழரிடம் மண்டியிட்ட கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை தெரிவுசெய்துள்ளது. இவற்றை எல்லாம் விடுத்து நோர்வே தரப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உறைவிடமாக உள்ள தலதா மாளிகையில் சமாதானத்தை பேசுவதன் மூலம் பௌத்த பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்டு நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளை கண்டறியலாம் என்று அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. nitharsanam.com - RaMa - 09-08-2005 உண்மையில் தமிழர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று உண்மையாக விரும்பினால் தெகிவளை சூ என்றாலும் பேச்சு நடத்தலாம்..... - Mathan - 09-08-2005 விமான நிலையத்தில் பேச புலிகள் மறுப்பு இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சு நடத்தலாம் என்ற நோர்வேயின் அழைப்பை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். இன்று கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களைச் சந்தித்த விடுதலைப்புலிகள் இது தொடர்பான தமது முடிவுகளை அறிவித்துள்ளனர். தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாக இருந்தால், ஒரு அச்சுறுத்தலற்ற, பதற்றமற்ற இடத்திலேயே பேச்சுக்கள் நடக்க வேண்டும் என்று கூறிய விடுதலைப் புலிகளின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், கட்டுநாயக்க விமான நிலையம் அத்தகைய ஒரு இடமல்ல என்று தெரிவித்துள்ளார். நோர்வேயின் இந்த அழைப்பை இலங்கை அரச தரப்பு நேற்று புதன்கிழமையே ஏற்றுக்கொண்டிருந்தது. BBC Tamil |