Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள்
#9
ரணிலுக்கு இ.தொ.க., மு.கா. ஆதரவு?
[புதன்கிழமை, 7 செப்ரெம்பர் 2005, 14:18 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா அரச தலைவர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டை அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்னும் இரு நாட்களில் வெளியிட உள்ளார்.

இ.தொ.க.வின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அரசுத் தலைவர் சந்திரிகாவுடன் இணக்கமான உறவில் இருந்தபோதும் அக்கட்சியின் பெரும்பான்மையோர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடியபின்னரே அக்கட்சியின் ஆதரவு அறிவிக்கப்படும்.

டோக்கியோ பிரகடனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களையும் அமைதிப் பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம் காங்கிரசு ஆதரிக்கக் கூடும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இ.தொ.க.வும், மு.காவும் விரைவில் தங்களது அறிவிப்புகளை வெளியிட்டு ரணிலுடன் ஒப்பந்தத்தில் கைச்சாதிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தால் மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.தே.க. பிரச்சார நடவடிக்கைகளுக்கு மு.கா. வலுச்சேர்க்கும்.

மலையகம் மட்டுமல்லாது கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் இ.தொ.கா.வும் ஐ.தே.க.வும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டால் தமது அணிக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜே.வி.பி.க்கும் பிரதமருக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

இந்த உடன்படிக்கையில் பிரதமரும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவும் கைச்சாத்திடவுள்ளனர்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 09-05-2005, 09:59 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:01 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:02 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:03 PM
[No subject] - by RaMa - 09-06-2005, 04:53 AM
[No subject] - by வினித் - 09-07-2005, 10:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)