09-06-2005, 05:51 PM
சுந்தரம்பிள்ளை சபாரத்தினம் . ரெலோ இயக்க தலைவர்.கல்வியங் காடு
இந்ததகவல் சிலவேளை சிலரின் விமரிசனங்களிற்குள்ளாகலாம் ஆனாலும் நடந்த உண்மைகளையே எவ்வித திரிபும் இன்றி இங்கே தருகிறேன். காரணம் இன்னும் சிலர் மற்றும் மாற்று கருத்து காரர் என்று கூறிகொண்டு ஏதோ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு இயக்கத்தை புலிகள் அழித்து அதன் தலைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று பரப்புரை செய்து வருகின்றனர்.
சிறீ சாபரத்தினம் ரெலோ இயக்கதலைவர.; தமிழீழ விடுதலை இயக்கம்.இந்த இயக்கத்தை தொடங்கிய தங்க துரை குட்டிமணி செட்டி ஆகியோர் இலங்கை காவல் துறையால் கைது செய்யபட்டபின்னர் பிரபாகரன் அவர்கள் சிலருடன் போய் புதிய புலிகள் என்கிற இயக்கத்தை தொடங்கிய பின் செயலற்று கிடந்த தமிழீழ விடுதலை இயக்கம் என்கிற பெயருக்கு உயிருட்டி அதன் தலைவரானார் சிறீ சபாரத்தினம்.
ஆரம்பத்தில் இவரும் மற்றையவர்களை போல் உண்மையான தமிழீழ விடுதலைக்காக அதன் இலட்சியத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தாலும் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மத்திய அரசினதும் அதன் புலனாய்வு பிரிவினதும் வலையில் சிக்குண்டு போய் அதிலிருந்தும் மீழ முடியாத அளவிற்கு போய் விட்டார்
காலப்போக்கில் தமிழீழம் என்கிற இலட்சியத்திலிருந்தும் விலகி சுயநலவாதியாகி சுக போகவாழ்வில் உழலதொடங்கிவிட்டார். உதாரணமாக அன்றைய பிரபல நடிகைகளான நளினி மற்றும் ராதா போன்றவர்களினுடனான ஊரறிந்த நெருக்கம் வேறு பல பெண்களினுடனான தொடர்புகள் என்று அவர் பாதை வேறு திசை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது.
இவர் இப்படியென்றால் அவர் தலைமையிலான் இயக்கம் ஊரில் வாகன கடத்தல்கள் கொள்ளை கொலை என்று ஒரு விடுதலை இயக்கத்திற்குறிய பண்புகள் அற்று ஒரு கடத்தல் மாபியா கும்பல் போல செயற்பட ஆரம்பித்து விட்டது.
84 85 ம் ஆண்டுகளில் ஊரில் வீடுகளில் ஒரு வானம் வைத்திருக்க முடியாது வைத்திருந்தவர்கள் வாகனத்தின் சில்லுகளை களட்டி கட்டையில் ஏத்தி வைத்திருந்தனர்.
அதை விட கொள்ளைகள்சுளிபுரத்தில் பிரபலமான நகை அடைவுகடை (துரையப்பா கடை)நவக்கிரியில் ஒரு செல்வந்தர் வீட்டில்.என்றும் யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் மற்றும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம் என்று கோயில்களும் இவர்களால் கொள்ளையிடபட்டது.
இவை இப்படி நடந்து கொண்டிருக்க இந்திய தலையீடு இன்றி தனித்து புலிகள் போல தாக்குதலை நடத்தி அதன் முலம் ஆயுதங்களை சேர்க்க வேண்டும் என்று தலைமையை எதிர்த்த தாசும் அவர் நண்பர்களும் யாழ் வைத்திய சாலையில் வைத்து 86ம் ஆண்டு பங்குனி 11ம் திகதி சபாரத்தினத்தின் கட்டளைப்படி பொபி குழுவினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.(பொபி இப்போ வெளி நாடொன்றில் வசிக்கிறார்)
இந்த கொலைகளை கண்டித்து பொதுமக்களும் மாணவர்களும் நடத்திய ஊர்வலத்தில் ரெலோ உறுப்பினர்கள் கண்ழூடித்தனமாக சுட்டனர் அதில் ஒரு சிறுமியும் இன்னொருவரும் கொல்ல பட்டனர்.
1986ம் ஆண்டு சித்திரை மாதம் 17 அல்லது 18ந்திகதியென்று நினைக்கிறேன் திகதி மறந்து விட்டது. புலிகளின் படகு ஒன்று இலங்கை கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி அதில் வந்த போராளிகள் கொல்ல படுகின்றனர். அதில் அன்றைய மட்டு பொறுப்பாளர் அருணாவும் கொல்லப்பட்டதாக நினைத்து பொதுமக்கள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களால் இறந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்து முகமாக வீதிகளில் வாழை தோரணங்கள் கட்டபட்டது.
இதில் அருணாவும் கல்வியங் காட்டை சேந்தர் என்பதால் அவரது ஊரில் ஊர் மக்கள் அருணாவின் படங்கள் பதாதைகள் என்று கட்டினார்கள் அதே சமயம் சிறீ சபாரத்தினமும் கல்வியங் காட்டில் உள்ள ஒரு முகாமிலேயே இருந்தார்.
கல்வியங்காடு கட்டை பிராய் என்னுமிடத்தில் மக்களால் கட்டபட்ட பதாதைகளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் அறுத்தெறிய பொது மக்கள் அதை எதிர்க்க பொது மக்களை அவர்கள் தாக்கினார்கள்.அப்போது அங்கு சென்ற புலிகளின் உறுப்பினர்களான முரளி(புலிகளின் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்து விட்டார்)மற்றும் பசீர் காக்கா என்கிற முத்த உறுப்பினர் ஆகியோரை ரெலோகாரர் பிடித்து அவர்கள் முகாமுக்குகொண்டு சென்று அடித்து உதைத்து அடைத்து வைக்கபட்டனர்.
இந்த தகவல் புலிகளின் தலைமைக்கு கொண்டு செல்ல படுகிறது
அப்போதை யாழ் தளபதி கிட்டு தலையிட்டால் நிலமை மேலும் சிக்கலாகும் என்பதால் உடனடியாக அப்போது தான் இந்தியாவிலிருந்து வந்திருந்த புலிகளின் முத்த உறுப்பினரும் பிரச்சனைகளை மென்மையாக அணுகும் தன்மையுமடைய லிங்கம் என்பவர்தலைமை அனுப்பி வைக்கிறது. கல்வியங்காட்டு பகுதி அப்போ குளப்பகரமான நிலையிலிருந்தபடியால் லிங்கம் வேறொரு பகுதியில் அமைந்திருந்த ரெலோ முக்கியஸ்த்தர்கள் இருந்த ஒரு முகாமிற்கு போய் தன்னை அறிமுகபடுத்துகிறார். அப்போது அங்கிருந்த ரெலோ உறப்பினரால் லிங்கம் கண்ணில் சுடப்பட்டு இறக்கிறார்.
இதற்கு மேலும் ரெலோவுடன் கதைத்து பிரயேசனமில்லை என் நினைத்த புலிகள் ஒரு தாக்குதல்முலம் முரளியையும் காககாவையும் மீட்க முடிவு செய்கின்றனர். தாக்குதலின் இறுதியில் சபாரத்தினமும் கொல்லபடுகிறார்.
<span style='font-size:25pt;line-height:100%'>இது அழிப்பு யுத்தமல்ல மீட்பு யுத்தமே</span>

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/