09-06-2005, 04:15 PM
[size=18]<b>நீ வருவாய் என்ற நம்பிக்கையில்;............... </b>
என் உதடுகள் எதையோ
உச்சரிக்கத் துடித்தது
என்ன என வினாவினேன்
அது உன் பெயரைத்தான்
உச்சரிக்கத் துடித்தது.
எனது பேனா எதையோ
எழுதி விடத் துடித்தது
என்ன என வினாவினேன்
அதுவும் உன் பெயரைத்தான்
எழுதி விடத் துடித்தது.
என் உள்ளம் எதையோ
சொல்லிவிடத் துடித்தது
என்ன என வினாவினேன்
அதுவும் உன் நினைவுகளைத்தான்
அள்ளித் தெளித்து நின்றது.
இப்படி எல்லாமே
உன்னைச் சுற்றி வரும்போது
நீ மட்டும்
மௌனக் கடலினுள்
முக்குளித்துக் கிடக்கின்றாய்.
என் கண்ணீரைக் காண்பதில்
உனக்கென்ன ஆனந்தம்?
என்னை ஏமாற்றி விடுவதில்
உனக்கென்ன பேரின்பம்?
உன் எண்ணங்களைச் சுமந்தபடி
நான் ஏகாந்தமாய் அழுவது
உனக்கு நன்றாய்த் தெரியும்.
இருப்பினும்
நினைவுகளை புதைக்கத் துடிக்கிறாய்.
எனக்குத் தெரியும்
உன்னாலும் ஒருபோதும் முடியாது என்று.
உன் உள்ளப் பெட்டகத்தை
ஓர் முறை
மெல்லத் திறந்து பாரேன்.
அங்கே நிறைந்து கிடக்கும்
காதல் பூக்களெல்லாம்
இன்னமும் வாடாத மலர்களாய்
உன்னைப் பார்த்துச் சிரிக்கும்.
ஒத்துக் கொள்கிறாயா?
இப்போது சொல்..........
நீ ஏன் உன்னை ஏமாற்றுகிறாய்?
ஏன் உன் சின்ன உள்ளத்தை
சித்திரவதை செய்கின்றாய்?
இதற்கும் மௌனித்து நிற்கின்றாயா?
நொடிக்கு நூறு முறை
உன் நினைவுகளை எல்லாம்
கற்கண்டை சுமக்கும் எறும்பைப் போல்
நெஞ்சினில் சுமந்து கொண்டு
கொதிக்கும் பாலைவனத்தில்
கருகி விழுந்த பூவாக.......
எப்படியும்
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்.
என் உதடுகள் எதையோ
உச்சரிக்கத் துடித்தது
என்ன என வினாவினேன்
அது உன் பெயரைத்தான்
உச்சரிக்கத் துடித்தது.
எனது பேனா எதையோ
எழுதி விடத் துடித்தது
என்ன என வினாவினேன்
அதுவும் உன் பெயரைத்தான்
எழுதி விடத் துடித்தது.
என் உள்ளம் எதையோ
சொல்லிவிடத் துடித்தது
என்ன என வினாவினேன்
அதுவும் உன் நினைவுகளைத்தான்
அள்ளித் தெளித்து நின்றது.
இப்படி எல்லாமே
உன்னைச் சுற்றி வரும்போது
நீ மட்டும்
மௌனக் கடலினுள்
முக்குளித்துக் கிடக்கின்றாய்.
என் கண்ணீரைக் காண்பதில்
உனக்கென்ன ஆனந்தம்?
என்னை ஏமாற்றி விடுவதில்
உனக்கென்ன பேரின்பம்?
உன் எண்ணங்களைச் சுமந்தபடி
நான் ஏகாந்தமாய் அழுவது
உனக்கு நன்றாய்த் தெரியும்.
இருப்பினும்
நினைவுகளை புதைக்கத் துடிக்கிறாய்.
எனக்குத் தெரியும்
உன்னாலும் ஒருபோதும் முடியாது என்று.
உன் உள்ளப் பெட்டகத்தை
ஓர் முறை
மெல்லத் திறந்து பாரேன்.
அங்கே நிறைந்து கிடக்கும்
காதல் பூக்களெல்லாம்
இன்னமும் வாடாத மலர்களாய்
உன்னைப் பார்த்துச் சிரிக்கும்.
ஒத்துக் கொள்கிறாயா?
இப்போது சொல்..........
நீ ஏன் உன்னை ஏமாற்றுகிறாய்?
ஏன் உன் சின்ன உள்ளத்தை
சித்திரவதை செய்கின்றாய்?
இதற்கும் மௌனித்து நிற்கின்றாயா?
நொடிக்கு நூறு முறை
உன் நினைவுகளை எல்லாம்
கற்கண்டை சுமக்கும் எறும்பைப் போல்
நெஞ்சினில் சுமந்து கொண்டு
கொதிக்கும் பாலைவனத்தில்
கருகி விழுந்த பூவாக.......
எப்படியும்
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்.
<b> .. .. !!</b>

