Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்
#7
2. இலங்கை பார்லி., முடக்கம்! * "எதிர்பாராத' அதிர்ச்சி திருப்பம் * அதிபர் சந்திரிகா விஸ்வரூபம் * 3 மந்திரிகள் திடீர் டிஸ்மிஸ் * நாடு முழுவதும் கொந்தளிப்பு

கொழும்பு: இலங்கையில் நேற்று பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதிபராக உள்ள சந்திரிகா அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்து ராணுவம் உட்பட 3 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தார். அத்துடன் நிற்காமல், பார்லிமென்டை இரண்டு வாரம் முடக்கி வைத்து விட்டார். இதனால், அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு உட்பட பல இடங்கள், ரணகளம் ஆகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் ரணில் நடத்தி வரும் பேச்சுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சந்திரிகா எடுத்துள்ள திடீர் முடிவால் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. "டிவி', "ரேடியோ' மின் நிலையங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளாக நிலவி வரும் இனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், அதிகார பகிர்வு தொடர்பான திட்டத்தை விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 31ம் தேதி நார்வே சமரச குழுவிடம் சமர்ப்பித்தனர். வரைவு திட்டத்தில், வடக்கு இலங்கையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது மற்றும் அதிகார பகிர்வு குறித்து குறிப்பிட்டு இருந்தனர். இடைக்கால அரசை 5 ஆண்டுகள் நிர்வகிக்க வேண்டும். இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பே ஆட்சி நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொள்வது உள்ளிட்டவை புலிகள் வரைவு திட்டத்தில் இடம் பெற்று இருந்தது.

புலிகளின் வரைவு திட்டத்தை அதிபர் சந்திரிகா ஏற்கவில்லை. இதற்கு முன்பு இலங்கையில் ஆட்சி புரிந்த அரசுகள் அளித்த திட்டங்களை புலிகள் நிராகரித்துவிட்டனர். இப்போது அவர்களாக அறிவித்த அதிகார பகிர்வை ஏற்றுக் கொண்டால் நாட்டில் பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என அதிபர் சந்திரிகா அஞ்சியதால் நேற்று அதிரடி முடிவுகளை எடுத்தார்.

அதிரடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அமெரிக்க அதிபர் புஷ்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிலையில் நேற்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

பார்லி முடக்கம்: இலங்கை பார்லிமென்ட்டை வரும் 19ம் தேதி வரை முடக்கி வைக்க சபாநாயகருக்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூன்று முக்கிய அமைச்சர்களான திலக் மரபானா (ராணுவம்), ஜான் அமரதுங்கா (உள்துறை), இம்தியாஸ் பக்கீர் மார்கர் (தகவல் தொடர்பு) ஆகியோரை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் வரைவு திட்டத்தை நிராகரித்த அதிபர் சந்திரிகா, இது நாட்டை பிரிவினைக்கு அழைத்து சென்று விடும் எனவும் கூறியுள்ளார்.

செயலர்கள் நியமனம்: மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் போலீஸ் ஐ.ஜி.,யும் தனது கட்சியின் ஆதரவாளருமான சிரில் ஹீரத்தை பாதுகாப்பு துறைக்கான புதிய செயலராகவும் அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார். இதே போல், தகவல் தொடர்புத் துறை செயலராக திலக் ரனாராஜய்யாவையும், உள்துறை அமைச்சக செயலராக தற்போதுள்ளவரையே நீடிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவம் குவிப்பு: முப்படைகளின் தளபதியாக அதிபர் சந்திரிகா உள்ளார். இதன் காரணமாக நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, "டிவி', ரேடியோ நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் உத்தரவுகள் அரசு கெஜட்டில் வெளியிடப்படும் என்பதால் அரசு அச்சகத்திற்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் ரணகளம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

முட்டுக்கட்டை: அதிபர் சந்திரிகாவின் இந்த அதிரடியால், புலிகளுடனான அமைதி முயற்சி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

சிக்கல்: ரணில் விக்ரமசிங்கே அரசு வரும் 12ம் தேதி இந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்தது. இந்நிலையில், சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரைராவுக்கு அதிபர் சந்திரிகா அனுப்பிய கடிதத்தில், பார்லிமென்ட்டை வரும் 19ம் தேதி வரை முடக்கி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படும் சூழ்நிலையும் அதிகரித்துள்ளது.

அதிகாரம்: அரசுக்கும், அதிபருக்கும் தற்போதுள்ள ஏற்பட்ட மோதல், இலங்கையில் புதிய அரசமைப்பு மாற்றம் செய்த பிறகு உருவாகிய உள்ள முதல் குழப்பம் ஆகும். புதிய அரசியல் சட்டப்படி, பிரதமர் உட்பட எந்த அமைச்சரையும் எவ்வித விளக்கமும் கூறாமல் நீக்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை தற்போது தான் சந்திரிகா முதன் முறையாக பயன்படுத்தியுள்ளார்.

சந்திரிகா கட்சி எதிர்ப்பு: இதற்கிடையில் அதிபர் சந்திரிகாவின் கட்சியும், பார்லிமெனட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள இலங்கை சுதந்திரா கட்சி விடுத்துள்ள 14 பக்க அறிக்கையில், "விடுதலைப்புலிகளின் வரைவு திட்டத்தை ஏற்க முடியாது' என குறிப்பிட்டு உள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: புலிகள் அறிவித்துள்ள இடைக்கால தன்னாட்சி ஆணைய நிர்வாகம் நாட்டை பிரிவினைக்கு துõண்டுவதாக அமையும். இது இலங்கையின் இறையாண்மையை பாதிப்பதோடு, அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது.

புலிகள் அறிவித்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று அமைதி தீர்வு காண வேண்டும் என்று இலங்கையை சர்வதேச நாடுகள் வற்புறுத்த கூடாது. இந்த விஷயத்தில் எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் எங்கள் கட்சி அனுமதிக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சந்திரிகா கட்சி சார்பில் இது வெளியிடப்பட்டாலும் இது தான் அதிபர் சந்திரிகாவின் கருத்தாகும் என கட்சியினர் அடித்து கூறுகின்றனர்.

மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து, அதிபர் சார்பாகவோ, அவரது அலுவலகத்தில் இருந்தே எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.

காரணம் இது தான்: புலிகளுடனான அமைதி முயற்சியை கவனித்து வந்தது பாதுகாப்பு அமைச்சர் திலக் மரபானா தான். புலிகளுக்கு சலுகை வழங்க இவர் தான் காரணமாக இருந்துள்ளார் என சந்திரிகா குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்துவதற்கு காரணமாக இருந்தார் என்பதற்காக உள்துறை அமைச்சர் ஜான் அமரதுங்காவை நீக்கம் செய்ததாகவும், தனது அதிரடி உத்தரவை எங்கே அரசு அச்சகத்தில் அச்சடிக்க விடாமல் தடுத்து விடுவாரோ எனக் கருதி தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இம்தியாசை நீக்கி விட்டார் எனவும் இலங்கை சுதந்திரா கட்சியினர் கூறுகின்றனர். இந்த மூன்று அமைச்சர்களும் வேறு இலாகாக்களை கூடுதலாக கவனித்து வந்தனர். எனவே அந்த இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர்களாக தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பர்.

நாட்டில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் ராணுவம் முழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் சுமேதா பெரேரா கூறினார்.

கொந்தளிப்பை விளைவிக்கும் ரணில் குற்றச்சாட்டு

கொழும்பு: "அதிபர் சந்திரிகாவின் பொறுப்பற்ற நடவடிக்கை குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். நாட்டில் ரத்தக்களரி ஏற்பட வழிவகுக்கும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

அதிபர் புஷ்சை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு, அதிபரின் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திரிகாவின் நடவடிக்கையை குறை கூறி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் ரணில் கூறியிருப்பதாவது:

அதிபர் சந்திரிகாவின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை நாட்டை குழப்பத்தில் தள்ளியுள்ளது. நாட்டில் கலவரம் வெடித்து ரத்தக்களரி ஏற்படுவதற்கு துõண்டி விட்டுள்ளார். புலிகளுடனான அமைதி முயற்சிக்கு இடையூறு அளிப்பதற்கு அதிபர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எமது அரசு புலிகளுடனான அமைதி முயற்சிகளை கைவிடாது.

இந்த சூழ்நிலையில் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். ராணுவத்தினர், போலீசார், அரசு ஊழியர்கள் அமைதி காக்க வேண்டும். அமைதி முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அனைவரும் ஒற்றுமை காக்க வேண்டும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[i][b]
!
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 05:09 PM
[No subject] - by AJeevan - 11-04-2003, 07:47 PM
[No subject] - by yarl - 11-04-2003, 09:00 PM
[No subject] - by சாமி - 11-04-2003, 09:21 PM
[No subject] - by சாமி - 11-04-2003, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 12:40 AM
[No subject] - by yarl - 11-05-2003, 07:04 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 08:26 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 08:30 AM
[No subject] - by தணிக்கை - 11-05-2003, 08:40 AM
[No subject] - by kuruvikal - 11-05-2003, 08:48 AM
[No subject] - by AJeevan - 11-05-2003, 10:53 AM
[No subject] - by விதுரன் - 11-05-2003, 11:03 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:19 AM
[No subject] - by Mathivathanan - 11-05-2003, 11:21 AM
[No subject] - by yarl - 11-05-2003, 11:23 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:40 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:42 AM
[No subject] - by aathipan - 11-05-2003, 12:33 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:04 PM
[No subject] - by sOliyAn - 11-05-2003, 06:11 PM
[No subject] - by Kanani - 11-05-2003, 08:32 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 09:10 PM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:18 AM
[No subject] - by sOliyAn - 11-06-2003, 03:25 AM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:29 AM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:56 AM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 11:25 AM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 11:27 AM
[No subject] - by vasisutha - 11-06-2003, 11:29 AM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:19 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 12:27 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 12:42 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:58 PM
[No subject] - by Paranee - 11-06-2003, 01:33 PM
[No subject] - by kuruvikal - 11-06-2003, 01:36 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 02:01 PM
[No subject] - by AJeevan - 11-06-2003, 02:57 PM
[No subject] - by Paranee - 11-06-2003, 03:20 PM
[No subject] - by AJeevan - 11-06-2003, 03:25 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 04:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:47 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:02 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:52 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 03:23 AM
[No subject] - by vanathi - 11-17-2003, 09:12 AM
[No subject] - by P.S.Seelan - 11-17-2003, 12:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)