Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்
#6
அமைச்சர்கள் மூவர் பதவி நீக்கம் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை அரசியலில் புதிய நெருக்கடி

பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக் மாரப்பனவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்தது.

நாட்டின் தேசிய நலன்கருதியே ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலமைப்பு மூலம் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை ஏற்படுத்தியதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது. தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஏற்படுத்தியிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை, நாட்டில் புதிய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த மூன்றும் முக்கிய அமைச்சுகளாகும். ஆயினும் மூவரையும் பதவி நீக்கம் செய்திருக்கும் ஜனாதிபதி இந்த மூன்று அமைச்சர் பதவிக்கு யார் யாரை புதிதாக நியமித்திருக்கிறார் என்ற விபரங்கள் இச்செய்தி எழுதும்வரை வெளியாகவில்லை.

இந்த மூன்று அமைச்சர் பதவிகளையும் ஜனாதிபதியே பொறுப்பேற்றிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.

மூன்று அமைச்சர்களின் பொறுப்புக்களையும் ஜனாதிபதி பொறுப்பேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மீண்டும் தனது பொறுப்பில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை கையேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சின் கீழேயே அரசாங்க அச்சகம், ஆட்பதிவு திணைக்களம், குடி வரவு, குடியகல்வு திணைக்களங்களும் பொலிஸ் திணைக்களமும் இருந்து வருகிறது. ஊடகத்துறை அமைச்சின் கீழேயே தகவல் திணைக்களம், லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் என்பன இருந்து வருகின்றன.

கடித மூலம் அறிவிப்பு

இந்த மூன்று அமைச்சர்களுக்கும் அனுப்பிவைத்துள்ள பதவி நீக்கக் கடிதத்தில் பதவி நீக்கம் செய்ய வேண்டியதற்கான காரணங்கள் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டிருப்பதாயும் ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைச்சர்களும் குறிப்பிட்ட இந்த மூன்று அமைச்சின் பொறுப்புக்களிலிருந்து மட்டும் நீக்கப்பட்டிருப்பதாயும் ஏனைய அமைச்சுப் பொறுப்புகள் தொடர்ந்தும் அவர்களிடம் இருந்து வரும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிலைமை நாட்டின் பாதுகாப்பு பந்தோபத்து நிலைமைமோசமடைந்து வருவதை தடுக்கும் முகமாகவே மிகவும் ஆழ்ந்த பரிசீலனையின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் மிக விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூவரை முக்கிய அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி பதவி நீக்கம் செய்த செய்திகள் நண்பகலுக்கு பின்னர் வெளியானது. இந்த செய்தி அரசியல் வாதிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரச எம்.பி.க்கள், அமைச்சர்கள் அடுத்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கூடி பேசினர். அமெரிக்காவிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தகவல் கூறப்பட்டது.

பிரதமர் நாடு திரும்புகிறார்

பிரதமர் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் ஜனாதிபதி புஷ்ஷை சந்தித்துப் பேச விருந்தார். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு அவர் அவசர அவசரமாக நாடு திரும்பவிருக்கிறார். பிரதமர் அமெரிக்காவில் இருந்த நேரம் பார்த்து ஜனாதிபதி இந்த நடவடிக்கை எடுத்திருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

சகவாழ்வு அரசியலின் இன்றியமையாமை பற்றி சமாதானத்தை விரும்பும் பலரும் ஓங்கிக் குரல் கொடுத்து வரும் வேளையில் மூன்று அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டமை சகவாழ்வு அரசியலையும் சமாதான முன்னெடுப்புகளையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக்மாரப்பன நீக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்தும் சிவில் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்து வருவார்.

இதேபோலவே இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரிடமிருந்த ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பு நீக்கப்பட்டாலும் அவர் தபால் தொலைதொடர்பு அமைச்சராக இருந்து வருவார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து உள்துறை அமைச்சு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ விவகார அமைச்சராக அவர் இருந்து வருவார்.

புதிய செயலாளர்கள்

அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சிறில் ஹேரத் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக திலக்ரணவீர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்படவில்லை. ஜே.என்.யுனைத்தே தொடர்ந்தும் இருந்து வருகிறார்.

பாதுகாப்பு இரட்டிப்பு

ரூபவாகினி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் விரும்பத்தகாத வன்செயல்கள் தலைதூக்குவதை தடுக்கும் முகமாக நேற்று பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. கடற்படையினர் இங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

நன்றி: வீரகேசரி
[i][b]
!
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 05:09 PM
[No subject] - by AJeevan - 11-04-2003, 07:47 PM
[No subject] - by yarl - 11-04-2003, 09:00 PM
[No subject] - by சாமி - 11-04-2003, 09:21 PM
[No subject] - by சாமி - 11-04-2003, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 12:40 AM
[No subject] - by yarl - 11-05-2003, 07:04 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 08:26 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 08:30 AM
[No subject] - by தணிக்கை - 11-05-2003, 08:40 AM
[No subject] - by kuruvikal - 11-05-2003, 08:48 AM
[No subject] - by AJeevan - 11-05-2003, 10:53 AM
[No subject] - by விதுரன் - 11-05-2003, 11:03 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:19 AM
[No subject] - by Mathivathanan - 11-05-2003, 11:21 AM
[No subject] - by yarl - 11-05-2003, 11:23 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:40 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 11:42 AM
[No subject] - by aathipan - 11-05-2003, 12:33 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:04 PM
[No subject] - by sOliyAn - 11-05-2003, 06:11 PM
[No subject] - by Kanani - 11-05-2003, 08:32 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 09:10 PM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:18 AM
[No subject] - by sOliyAn - 11-06-2003, 03:25 AM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:29 AM
[No subject] - by aathipan - 11-06-2003, 03:56 AM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 11:25 AM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 11:27 AM
[No subject] - by vasisutha - 11-06-2003, 11:29 AM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:19 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 12:27 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 12:42 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:58 PM
[No subject] - by Paranee - 11-06-2003, 01:33 PM
[No subject] - by kuruvikal - 11-06-2003, 01:36 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 02:01 PM
[No subject] - by AJeevan - 11-06-2003, 02:57 PM
[No subject] - by Paranee - 11-06-2003, 03:20 PM
[No subject] - by AJeevan - 11-06-2003, 03:25 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 04:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:47 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:02 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:52 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 03:23 AM
[No subject] - by vanathi - 11-17-2003, 09:12 AM
[No subject] - by P.S.Seelan - 11-17-2003, 12:17 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)