09-05-2005, 04:16 AM
sOliyAn Wrote:ம்.. ஆர்ப்பாட்டத்திலே என்னால் கலந்துகொள்ள இயலாவிட்டாலும், எனது மனைவியும் பிள்ளைகளும் கலந்துகொண்டார்கள். அவர்களது கருத்துப்படி, அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருபதிற்குள்தான் என்பதை அறியக்கூடியதாக இருந்தது. பங்குபற்றியவர்களில் பதினைந்திற்கும் மேற்பட்டோர் இந்த நாட்டு பிரஜைகளாகவும்.. காலவரையற்ற விசா வைத்திருப்போருமே என்பது குறிப்பிடத்தக்கது.
பிறேமன் நகரிலேயே ஆகக் குறைந்தது நூறு தமிழராவது 'டுல்டுங்' எனப்படும் தற்காலிக விசாக்களுடன், சட்டப்படி வேலை செய்யவும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களோ ஐந்திற்கும் குறைவானவர்களே.. ஏனெனில் அதிலேயும் இருவர் சிங்கள இனத்தவர்கள்.
ஆக, இப்படி திருப்பி அனுப்புதலை எதிர்பார்ப்போரும், அவர்களுக்காக மனமுருகி உணர்ச்சிவசப்படுபவர்களும்.. நல்ல விசாக்களுடனும் இந்நாட்டுப் புத்தகங்களுடனும் உள்ள தமிழரைக் குற்றஞ் சொல்லியவாறே.. தமது இருப்புகளுக்கான வழிகளை இருட்டாக்குவதிலேயே கவனமாக இருக்கப் போகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தற்காலிமான நிரந்தரமற்ற விசாவுடன் உள்ளவர்களே ஒரு நாள் சம்பளத்திற்காகவோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தால் அதன் பின்பு மற்றவர்களை குறை சொல்லி பயனில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 