Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம்
#4
ஏறாவூரில் படையினர் மீது தாக்குதல்: 2 பேர் படுகாயம்
றுசவைவநn டில நுடடயடயn ளுரனெயலஇ 04 ளுநிவநஅடிநச 2005

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் சந்வெளி சாலையில் இன்று மாலை 5.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறங்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் நோக்கி பேரூந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. முதலில் கைக்குண்டு வீசப்பட்டு பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இரு படையினரும் பொலநறுவை மருத்து மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து சந்திவெளி மற்றும் சித்தாண்டிப் பகுதிகளில் வீதியால் சென்ற மக்களை ஸ்ரீலங்கா படையினரின் மிருகத்தனமான தாக்கியுள்ளனர்.

இதேவேளை சித்தாண்டிப் பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னும் அறியவரவில்லை.

http://www.sankathi.net/index.php?option=c...=2384&Itemid=41
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 09-04-2005, 02:32 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 05:10 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 05:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)