09-04-2005, 07:41 AM
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியிலுள்ள பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை மீது தேசவிரோதிகள் மேற்கொண்ட தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். இன்று காலை ஞாயிற்றுக்கிழமை 6.25 மணியளவில் சிறீலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் இரண்டு உந்துருளிகளில் வந்த நான்கு தேசவிரோதிகள் முதலில் துப்பாக்கிப் பிரயோகத்தையும் பின்னர் கைக்குண்டையும் வீசிவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இருந்த தளபாடங்களை பெற்றோல் ஊற்றி எரியுூட்டினர். அச்சமயம் அரசியல் பணிக்காக அலுவலகத்தில் தங்கியிருந்த அருள்நேசன் என்ற போராளி தேசவிரோதிகளின் துப்பாக்கிச்கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வேளையில்வீரச்சாவடைந்தார்.தேசவிரோதிகளால் சுடப்பட்ட ஒன்பது துப்பாக்கிக் குண்டுகள் உடலில் துளைத்துள்ளது. இச் சம்பவம் குறித்து பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை பொறுப்பாளர் கமலக்கண்ணன் தெரிவிக்கையில்: இந்தக் கோட்ட அலுவலகம் மீது இடம்பெற்ற நான்காவது தாக்குதல் இதுவாகும். இதற்கு படையினரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தேச விரோத ஆயுதக்குழுக்களுமே பொறுப்பு என்றும் இத்தாக்குதல் தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மலரினி மலரவன்
www.tamilkural.com
மலரினி மலரவன்
www.tamilkural.com

