Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர
#5
கொழும்பில் ஐ.நா.சிறப்புத் தூதுவர்
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 16:48 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கைத் தீவில் முறிவடையும் நிலையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தச் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அவையச் செயலாளர் நாயகம் கோபி அனானின் சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு வந்தடைந்தார்.


ஐந்து நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அவர் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார்.

லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட பிறகு சிறிலங்காவுக்கு வருகை தரும் முதலாவது உயர்நிலை அதிகாரி இவர்.

ஐ.நா. சிறப்புத் தூதுவரின் இதர பயண விவரங்களை சிறிலங்கா வெளிவிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிமாலி அருணாதிலக்க தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, சீனாவிலிருந்து சிறிலங்கா திரும்பிய பின்னரே லக்டார் பிராக்மியின் பயணங்கள் இறுதி செய்யப்படும் என்றார் அவர்.

சிறிலங்கா வந்துள்ள லக்டார் பிராக்மி, ஆப்கான் பிரச்சனையிலும் ஐ.நா. சபையின் சிறப்புத் தூதுவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 09-01-2005, 06:52 PM
[No subject] - by kurukaalapoovan - 09-01-2005, 07:20 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 08:12 PM
[No subject] - by தீபா - 09-03-2005, 11:28 AM
[No subject] - by வினித் - 09-03-2005, 01:06 PM
[No subject] - by வினித் - 09-03-2005, 03:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)