![]() |
|
முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர (/showthread.php?tid=3467) |
முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர - வினித் - 09-01-2005 முறிவடையும் யுத்த நிறுத்தம்: இலங்கை வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர்! [வியாழக்கிழமை, 1 செப்ரெம்பர் 2005, 21:27 ஈழம்] [ம.சேரமான்] மூன்றரை ஆண்டுகாலம் நீடித்திருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையத்தின் சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி ஐந்து நாள் பயணமாக நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கோபி அனானின் தூதுவராக அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் குறித்த செய்தியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஹிமாலி அருணாதிலக்க உறுதிப்படுத்தினார். ஐ.நா. சிறப்புத் தூதுவரின் பயண ஒழுங்குகளை சிறிலங்கா வெளிவிகார அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடாத்த உள்ளார். www.puthinam.com - வியாசன் - 09-01-2005 எங்களுக்கு எரிச்சலை கிளப்ப வருகிறாரோ வாறதுஎண்டால் நம்ம பகுதிக்கும் வரவேணும் - kurukaalapoovan - 09-01-2005 வாறதே அதுக்காக தானே. மக்களின் எழுச்சிப்பிரகடனங்களை கவனிக்காமல் இருக்கேலுமோ. - வினித் - 09-01-2005 சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடத்தி விட்டு சொல்லுவர் இரண்டு பகுதியும் யுத்த்நிறுத்ததை வடிவா பிடிங்கே சொல்லிட்டு அவர் ............................... - தீபா - 09-03-2005 கொழும்பில் ஐ.நா.சிறப்புத் தூதுவர் [சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 16:48 ஈழம்] [ம.சேரமான்] இலங்கைத் தீவில் முறிவடையும் நிலையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தச் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அவையச் செயலாளர் நாயகம் கோபி அனானின் சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு வந்தடைந்தார். ஐந்து நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அவர் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார். லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட பிறகு சிறிலங்காவுக்கு வருகை தரும் முதலாவது உயர்நிலை அதிகாரி இவர். ஐ.நா. சிறப்புத் தூதுவரின் இதர பயண விவரங்களை சிறிலங்கா வெளிவிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிமாலி அருணாதிலக்க தெரிவிக்க மறுத்துவிட்டார். அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, சீனாவிலிருந்து சிறிலங்கா திரும்பிய பின்னரே லக்டார் பிராக்மியின் பயணங்கள் இறுதி செய்யப்படும் என்றார் அவர். சிறிலங்கா வந்துள்ள லக்டார் பிராக்மி, ஆப்கான் பிரச்சனையிலும் ஐ.நா. சபையின் சிறப்புத் தூதுவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. - வினித் - 09-03-2005 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா. தூதுவர் சந்திப்பு [சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 18:14 ஈழம்] [கொழும்பு நிருபர்] யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுகளை நடாத்த உள்ளார். இப்பேச்சுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதி நடைபெறக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சந்திப்பின் போது மூன்றரை ஆண்டு கால யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமும் தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படாதது, இதனால் தமிழ் மக்கள் விரக்தி நிலையில் முழு அளவில் நம்பிக்கையற்று இருப்பது, இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்து வருவது, திருமலை புத்தர் சிலை, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் சிங்களப் பேரினவாத நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் ஒத்துழைப்பு அளித்து வருவது, உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழரின் வாழ்விடங்களில் இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ முகாம்களால் கடற்றொழில், நெற்செய்கை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கம் அளிக்கக் கூடும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலான வவுனியா, கிளிநொச்சிப் பிரகடனங்களும் ஐ.நா. சிறப்புத் தூதரிடம் கையளிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது. - வினித் - 09-03-2005 யுத்தநிறுத்த கண்காணிப்பிற்கு ஐ.நா. அமைதிப்படைக்கு சந்திரிகா அழைப்பு [சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 20:08 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி] யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை இந்நாட்டிற்கு அனுப்புமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டபோதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐ.நா. செயலாளருடன் சந்திரிகா தொடர்பு கொண்டபோது அவர் ஆபிரிக்கா நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த உரையாடலின் போது யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ள சந்திரிகா, யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு தான் விடுத்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. அதனால் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையைக் கொண்டு யுத்தநிறுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை சரியாக கொண்டுநடத்த முடியும் என்றும் ஐ.நா. செயலாளருக்கு சந்திரிகா தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட புதிய வெளியுறவு அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேசியுள்ளார். சந்திரிகாவின் இந்த அவசர கோரிக்கை குறித்து தான் கவனம் செலுத்துவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் ஆராய்வதற்காக தான் ஐ.நா. பிரதிநிதியொருவரை சிறிலங்காவுக்கு அனுப்புவதாக அவர் சந்திரிகாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் தான் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அமெரிக்கா வரும்போது இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் விரிவாக ஆராய்வதாக சந்திரிகா கூறியுள்ளார் |