Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நல்லூர் திருவிழா
#7
<b>கந்தபுராண கலாசாரத்தின் உறைவிடமாக விளங்கும் நல்லூர்க் கந்தன் ஆலயம்</b>

[size=18]<b>இன்று தேர்த்திருவிழா</b>

வரலாற்று புகழ்மிக்கதும் உலகப் பிரசித்தி பெற்ற முருக ஸ்தலங்களுள் ஒன்றானதும் கந்தபுராண கலாசாரத்தின் உறை விடமானதுமான நல்லூர்க் கந்தசுவாமி கோயில்இ யாழ்ப்பாணத்து அரசர்களின் நேரடி பரிபாலனத்திற்கு உட்பட்ட வணக்கஸ்தலங்களில் ஒன்றாகும்.

இராஜ இராஜ சோழ மன்னனின் அரச பிரதிநிதியான செண்பகப் பெருமாள் எனும் புவனேகபாகுவினால் 1454 இல் கட்டப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு மேலாக சைவத்தமிழரசர்களால் ஆளப்பட்டு வந்த யாழ்ப்பாணம் அந்நியர் வருகையின் போது பலகோயில்கள் இடிக்கப்பட்டவேளைஇ நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் இடிபட்டது.

இத்தனை இடர்களையும் வென்ற சிவபூமி மக்கள் 1734 இல் புதிய ஒரு ஆலயம் அமைத்து வேல் ஒன்றை வழிபட்டு வந்தனர். ஆரம்பத்தில் இந்த மடாலயம் கந்தபுராணம் படிக்கும் இடமாகவும் பெரிதும் பயன்பட்டு வந்தது. ஆறுமுக நாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பணியாலேயே யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம் எனப் புகழ் பெறலாயிற்று.

இதனைத் தொடர்ந்து அக்காலத்தில் சிறப்பராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியாரும்இ சுப்பையா குருக்களும் தமது அயராத முயற்சியினால் இம்மடாலயத்தை கற்களாலும் கருங்கற்களாலும் கட்டுவித்தனர்.

இந்த ஆலயத்தை கருங்கற்களால் கட்ட வேண்டும் எனவும் வேலுக்குப் பதிலாக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமெனவும் கூறிய ஆறுமுக நாவலரால் மூவாயிரம் ரூபா பணம் திரட்டி கொடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆயினும் இவர் காலத்தில் இத்திருப்பணி நிறைவேறவில்லை.

மூலஸ்தான வேலைகள் கருங்கல் திருப்பணியாக 1902 இல் கட்டப்பட்டு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு இடம் பெற்றது. 1909 இல் சுற்றுப்புற பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டன. இவற்றுக்கு முன்னதாக 1899 இல் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு சான்று அதிலுள்ள செப்பு ஏடு ஆகும்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலானது பக்தர்களையும் சித்தர்களையும் கவர்ந்த இடமாக விளங்குகின்றமையால் இத்தலத்தினை முதன்மைப்படுத்தி பல இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவற்றுள் சில நல்லைத் திருவருக்கமாணிஇ நல்லைக் கலித்துறைஇ நல்லை சுப்பிரமணியக் கடவுள் பதிகம்இ நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேரடி வைரவர் கடவுள் பேரில் பதிகம்இ நல்லூர் சுப்பிரமணிய பிள்ளைத் தமிழ்இ நல்லைக் கந்தரந்தாதிஇ நல்லூரான் வெண்பா நாற்பதுஇ நல்லூர் முருகன் காவடிச் சிந்துஇ நல்லைக் குமரன் குறவஞ்சி.

இவ்வாறே சித்தர்களுள் ஒருவரான யோகர் சுவாமிகள் பின் வருமாறு நல்லூரின் சிறப்பைக் கூறுகிறார்.

"நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி- கிளியே

இரவு பகல் காணேனடி.

முருகன் திருப்புகழ் பாடுவோர் ஒருபுறமும் இன்னிசை கீதம் இசைப்போர் ஒரு புறமும் காவடி எடுப்போர் ஒரு புறமும்இ அங்கப் பிரதிஷ்டைஇ அடி அழிப்போர் மறுபுறமும் உடுக்கு முதலான இன்னிசை வாத்தியங்கள் இசைப்போர் ஒரு புறமும் தேர்வடம் பிடிப்போர் இருபுறமும் இருகரங்களையும் கூப்பி கண்ணீர் மல்க ஆறுமுகப் பெருமானை இறைஞ்சுவோர் ஒரு புறமுமாக வரும் இப்பேர்ப்பட்ட பல அற்புதக் காட்சிகளுக்கு மத்தியில் இன்று தேர் ஏறி வரும் ஆறுமுகப் பெருமானின் தேர் உற்சவத்தை பார்ப்பவர் எல்லோரும் பெறுதற்கரிய பெரும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.

தினக்குரல்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 09-02-2005, 04:31 PM
[No subject] - by கீதா - 09-02-2005, 07:14 PM
[No subject] - by kuruvikal - 09-02-2005, 07:18 PM
[No subject] - by tamilini - 09-02-2005, 07:28 PM
[No subject] - by MUGATHTHAR - 09-02-2005, 07:52 PM
[No subject] - by Mathan - 09-02-2005, 09:51 PM
[No subject] - by kuruvikal - 09-03-2005, 05:25 AM
[No subject] - by Mathan - 09-03-2005, 05:34 AM
[No subject] - by MUGATHTHAR - 09-03-2005, 07:55 AM
[No subject] - by Danklas - 09-03-2005, 08:24 AM
[No subject] - by Rasikai - 09-03-2005, 11:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)