09-02-2005, 09:57 AM
மேலுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் பின் வரும் தலைப்புகள் அல்லது கேள்விகளில் இந்தக் கருத்தாடலை நெறிப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
1)தமிழில் பிற மொழிகளைக் கலக்கலாமா?
நாம் பிற மொழிகளைக் கலந்தால் முதலாவது பிரச்சனை அந்த மொழி தெரியாத தமிழருக்கு அது விளங்காது,மேலே டொட்ச்சில் எழுதியது எனக்கும் மற்றும் பலருக்கும் விளங்கி இருக்காது .ஆகவே கருத்தாடல்களுக்கு இது நடை முறைச்சாத்தியம் அற்ற முறமை.
2)வட மொழியை தமிழ் படுத்துவதா அல்லது தூய தமிழைப் பாவிப்பதா?
நான் முன்னர் கூறியதைப் போல் இது ஒரு வகையில் தமிழரின் அரசியல் மற்றும் கலாச்சார திணிப்புகளுக்கு எதிரான போரட்டங்களின் தொடர்ச்சியே.இதில் எது வட சொல் எது தூய தமிழ் சொல் என்று அனேகருக்கு குளப்பம் இருக்கிறது.ஏனெனில் வட சொற்கள் தமிழ் மொழிக்குள் கலந்து வெகு காலம் ஆகப் பாவனையில் வந்து விட்டது.
நாம் எமது மொழியினூடாக நாம் தமிழர் என்ற அடயாளத்தையும், எமது தனித்துவத்தையும் ,வரலாற்று ரீதியான எமது அரசியல் தொடர்ச்சியையும் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறைக்கும் ,இந்த தொடர்பை ஏற்படுத்த வேன்டும் என்று எண்ணுவோம் ஆகில், நாம் தூய தமிழையும் அதன் பயன் பாட்டையும் ,எமது மொழி நடையில்
எவ்வளவுக்குப் பாவிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பாவிப்பது சிறந்தது.தெரிந்தவர்கள் அதை இங்கு பாவிப்பது ,யாழ் களம் வரும் இழய தலை முறையினரும் இச் சொற்களைப் பாவிக்கவும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.தெரிந்தவர்களே இதனைய்ச் செய்யாமல் இளய தலை முறையுடம் அதனை எதிர் பார்பதுவும், அவர்கள் அதனைப் பாவிக்கும் போது ,குறை சொல்வதுவும் அவர்களை வெறுப் படயச் செய்யலாம்.இங்கு வரும் இளய தலை முறயினரே எமது தொடர்பைக் காவிச் செல்லக் கூடியவர்கள்,அவர்கள் தமிழ் மேலும் தமிழர் என்ற அடயாளத்திலும் பற்றுறுதி கொன்டதாலேயே இங்கு வருகின்றனர்.
ஆகவே முடிவில் நான் கூறுவது,எல்லோரும் கூடிய வரையில் தூய தமிழைப் பாவிப் போம், ஒருவரை ஒருவர் பார்த்து எமது மொழி வளத்தைப் பெருக்குவோம்.சில வேளைகளில் இது இளயவர்களிடம் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்குமாகயில் வேற்று மொழிகளை இடக் கிடை தேவைக்கு ஏற்ற வகையில் பயன் படுத்துவோம், ஆனால் கூடிய வரையில் தவிர்ப்பது நல்லது.எமது பயன் பாட்டிலேயே எமது மொழியும் எமது அடையாளமும் பாதுகாக்கப் படும் என்பதை மனதில் நிறுத்தி பொறுப்புடன் செயற்படுவோம்.