09-02-2005, 08:13 AM
kuruvikal Wrote:கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதலை ஒருநாள் கழிந்து விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்பட்டு அத்தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தன.Mathan Wrote:இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
95க்குப் பின்னர் கொழும்பில் நடந்த குறைந்தது இரண்டு தாக்குதலுக்கு சிறிது தாமதித்து புலிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்..! ஒன்று கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல்... இரண்டு கட்டுநாயகா சிவில் மற்றும் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்...! இது குறித்த ஒளிவீச்சினைக் கூட புலிகள் வெளியிட்டுவிட்டனரே...!
ஆனால் கட்டுநாயக்க தாக்குதல் நடைபெற்ற அன்று அன்றைய புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் (தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது) விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதல் அணி விமானதளம் மீதான அழித்தொழிப்பு தாக்குதலை நடாத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலிகளின் குரலில் வந்த செய்திகளில் தாக்குதல் நடாத்தியவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதேவேளை விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட கட்டுநாயக்க தாக்குதல் ஒளிப்பட விபரணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் சிலர் நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றும் போது விடுதலைப் புலிகளே தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புத்தகம் மூலமே உத்தியோகபுூர்வமாக எழுத்து வடிவில் உரிமை கோரப்படவிருக்கிறது.
தாயகத்தின் விடிவிற்காய் தென்பகுதியில் தம்மை ஆகுதியாக்கிய அந்த நிழல் வீரர்களின் வரிசையில் கட்டுநாயக்கவில் காவியமானவர்களின் வீரவரலாறு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நு}ல் மூலம் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி. ஏனைய சம்பவங்களிலும் தம்மை ஆகுதியாக்கிய வீரர்களின் வரலாறுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>


