09-02-2005, 03:27 AM
வடமொழிச் சொற்களை எப்படி தமிழில் எழுதவேண்டும் என்ற விதியை தொல்காப்பியர் அவர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
தொல்காப்பியர் வடசொல்லை எவ்வாறு தமிழில் எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார். வடமொழி ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அமைக்க வேண்டும் என்பார்.
வடதொற் கிளவி வடவெழுத் தொரீ,
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே (தொல் 884)
வடசொற்களின் ஒலியினை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வட சொல்லாகும். ஹரி- அரி, ஹரன்-அரன், ராமன் - இராமன், ராஜராஜன் - இராச இராசன், ராஜேந்திரன் - இராசேந்திரன், இலக்குவன். மேலும் வடசொற்கள் சிதைந்து வரினும் (பிரயாணம் - பணயம், ரிஷி - இருடி) நீக்க வேண்டியதில்லை என்கிறார். தொல்காப்பயிர் காலத்தில் அல்லது அதற்கு சற்று முன்தான் வடமொழி தமிழில் கலக்கத் தொடங்கி இருக்க வேண்டும்.
பிற்காலத்தில் பவுத்தம், சமணம், வைதீகம் போன்ற பிற சமயங்கள் தமிழ்நாட்டில் புகுந்ததால் வடசொற்கள் பிராகிருத (பாலி, மகராஷ்ட்ரி, மகதி முதலிய) வடிவில் தமிழில் வழங்கின. ப்ரதிமா - படிமை, ஸமரணா - சமயர், இஷ்டம்- இட்டம், நஷ்டம், புஷபம் - புட்பம், - நட்டம், விஜ்ஞாபதம் - விண்ணப்பம்.
வடசொற்கள் தமிழில் ஒலி வேறுபாடு இல்லாது வழங்குவது தற்சம வடசொல் என்றும், வேறுபாடு அடைந்து வழங்குவது தற்பவ வடசொல் என்றும் பிரித்துக் கூறுவர். அமலம், கமலம், குங்குமம், மேரு, காரணம் காரியம் தற்சமச் சொற்களாகும்.
வடமொழிக்கே உரிய ஒலியுள்ள எழுத்துக்களால் அமைந்த ரோசா (ரோஜய), கயிட்டம் (கஷ்டம்) தஷிணம் ஆகியன தற்பவ சொற்களாகும்.
ஆனால் வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களையே நாம் பயன்படுத்த வேண்டும். நட்டம் - இழப்பு, புட்பம் - புூ அல்லது மலர், இட்டம் - விருப்பம்.
வடமொழிக் கலப்புக்கு தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டித் தப்பிக்க முனையக் கூடாது.
தாமரை, கும்பம், சங்கம், வாரணம் என்பன தூய தென் சொற்கள் என்பது பாவாணர் மதமாகும்.
வடமொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித் தமிழில் எழுத முடியும் என்பது மறைமலை அடிகாளார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்கள் மதமாகும்.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>