09-01-2005, 02:26 AM
அண்மையில் 35 குடும்பங்களை சேர்ந்த சுமார் 150 பேர் வரையில் ஜேர்மன் அரசால் விஷேட விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு நாடுகடத்தப்பட்டதை நாங்கள் முதலிலே உங்களுக்கு தந்திருந்தோம். மேலதிக செய்தியொன்று அந்த விமானத்திலே தமிழ் பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுத்த அடுத்த நாட்களிலேயே மனிதாபிமானமற்ற முறையிலே நாடுகடத்தப்பட்டுள்ளார். இவர்களை பண்டார நாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 100 யூரோக்களை கொடுத்துவிட்டு நன்றி வணக்கம் சொல்லிவிட்டு பின்னர் விமானத்திலே நோய் மிக மோசமடைந்த தமிழர்கள் சிலரை மீண்டும் ஜேர்மனிக்கு திருப்பி கொண்டுவந்துள்ளனர்.

