11-02-2003, 08:19 AM
கடந்த செவ்வாயன்று இங்கிலாந்து குறொய்டன் பகுதியில் தமிழ் வாலிபர் ஒருவர் பரிதாபகரமான முறையில் கதறக்கதற வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் கிப்பாப் கடையொன்றில் உணவுப் பொருளை வாங்கிக் கொண்டு தனது காருக்குள் வந்து ஏறும்போது திடீரெனச் சூழ்ந்துகொண்ட இன்னொரு தமிழ் இளைஞர் குழுவொன்று கூரிய ஆயுதங்கள், கோடரிகளால் வெட்டினார்கள். இந்த இளைஞனை வெட்டிக் கொன்றுவிட்டு, இவர்கள் அவருடைய காரையும் அடித்து நொருக்கினார்கள். அதன் பின்னர் இவர்கள் விரைந்து அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். அத்தருணம் சிலர் அவசரமாக போலீசிற்கு தகவல் கொடுத்த காரணத்தால் போலீஸ் இந்த இளைஞர்களை சுற்றி வளைத்தது. சிறிது து}ரம் போவதற்குள்ளேயே இவர்கள் கைதானார்கள். இவர்களில் இருவருடைய உடையில் இரத்தம் படிந்திருந்ததாகவும், கொத்திக் கொல்ல பயன்படுத்தப்பட்ட கோடரியும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இலண்டனில் தமிழ் இளைஞர்கள் குழுக்களாக மோதுவதால் இதுவரை 18 வரையான கொலைகள் இடம் பெற்றுள்ளன.
[i][b]
!
!

