Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#13
நாம் அதிகம் தெரிந்து கொண்டிராத அதீத மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இயக்குநர் பாலா, இந்தப் படத்தில் நிகழ்விலிருந்து விலகி நிற்கும் "சித்தன்" என்ற பாத்திரத்தை விக்ரம் மூலமாகவும் இயல்பில் கண்டுகொள்ளாமல் கடந்து போகிற "சக்தி' என்ற பாத்திரத்தை சூர்யா மூலமாகவும் அறிமுகப்படுத்துகிறார்.

சுடுகாட்டில் பிறக்கும் விக்ரமின் ஜனனத்தில் துவங்குகிறது கதை. சவங்களினூடான வாழ்க்கையில் தனித்துப் போகும் விக்ரமுக்கு மனித உறவுகளின் மகத்துவம் புரியத் துவங்குவதுடன் கதை முடிகிறது.

இந்த ஒற்றை வரியில் சொல்லத்தக்க கதை, சுடுகாடு தொடங்கி கஞ்சாத் தோட்டம், சிறைச்சாலை முதலான வாழ்வின் இயல்பு வெளிச்சம் படாத இருண்ட பிரதேசங்களில் பயணிக்கிறது.

எல்லாமே புதிய அனுபவங்கள்; அவற்றைப் புரிய வைப்பதில் வெற்றி பெறுகிறார் பாலா.

சித்தன் பாத்திரம் நுட்பமானது. உடுத்தத் தெரியும்; துவைக்கத் தெரியாது, மொழி தெரியும்; பேசத் தெரியாது, விசுவாசம் தெரியும்; அன்பு கொள்ளத் தெரியாது. தூங்கத் தெரியும்; துக்கம் தெரியாது.

இதை நடிப்பால் வடித்துக் காட்டியிருக்கிறார் விக்ரம்.

கண்களைச் சிமிட்டக் கூடத் தெரியாத ஒரு மனிதனை எப்படிக் கற்பனை செய்வது? "செய்திருக்கிறார்' விக்ரம்.

சுடுகாட்டுச் சிதைக்கு அருகில் எதையோ அவர் எடுத்துத் தின்னும்போது "பக்'கென்றிருக்கிறது - அது ஒரு பட்டாணிக் கடலையாகக் கூட இருக்கலாம்.

அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உணவளிக்கும் சங்கீதாவின் பின்னால் அவர்... சரியாகச் சொல்வதானால் விசுவாசமுள்ள ஒரு நாய் போலவே தொடர்வது நெகிழ வைக்கிறது. தூங்கும் அவரைச் சங்கீதா தட்டி எழுப்ப உறுமுகிறாரே ஒரு உறுமல்.... அவருக்குள்ளிருக்கும் மிருகம் வெளிப்படும் கட்டங்கள்.

அவருக்கு வேலை வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட சங்கீதா, ""கலெக்டர் வேலை இருக்கு, போறியா?'' என்றதும் "சரி' என்று தலையாட்டும்போது மிருகத்துக்குள்ளிருக்கும் அப்பாவிக் குழந்தை தலைகாட்டுகிறது.

இப்படி அடங்காத மிருகம், அப்பாவி மனிதன் என்று மாறும் முயற்சியில் சித்தனுக்குள் காணாமல் போய்விடுகிறார் விக்ரம்.

அந்தக் கரும்பாறையைச் செதுக்கும் உளியாக சூர்யா. விக்ரம் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முன்னால் பதற்றப்பட்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் நடித்துத் திகைக்க வைக்கிறார் அவர்.

பொய்யையும், புரட்டையும் உருட்டி, கிண்டி வயிறு வளர்க்கும் போக்கிரியான இந்த வேடத்தை இதற்கு முன்னால் - அவரது அப்பா சிவகுமார் உள்பட யாரும் செய்ததாகத் தெரியவில்லை; இவ்வளவு நன்றாகவும். வாழ்க்கையை விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொண்டு உயிர்விடும் அந்தப் பாத்திரம் சூர்யாவால் உயிர்பெறுகிறது.

உடலில் இருக்கும் அத்தனைப் பொருள்களையும் சிவாஜி, பத்மினி மேல் சூதாடித் தோற்கும் லைலா இனி என்ன செய்யப் போகிறார் என்று நினைத்தால், செய்கிறாரே ஒரு ரகளை! அவரது கிளைமாக்ஸ் நடிப்பு விக்ரம், சூர்யாவுடன் போட்டி போடத் தக்கது என்று "பந்தயமே' கட்டலாம்.

ரசிகாவாகக் காணாமல் போய் கஞ்சா விற்கும் பெண்ணாகத் திரும்பி வந்திருக்கும் சங்கீதா, இனி தமிழ்ப் படவுலகில் கண்டு கொள்ளப்படுவார். விக்ரம், சூர்யா இருவரையும் சைக்கிளில் வைத்து அவர் அடிக்கும் "டிரிபிள்ஸ்...' அடேங்கப்பா!

வில்லன் மகாதேவன் புதுமுகமாம். வெகுகாலம் நம்முடன் பழகிய தோற்றம் அவருக்கு. யார் யார் மாதிரியோ தோன்றினாலும் புதிதாகத் தெரிகிறார்.

கண்ணில் தெரியும் இவர்களுக்கிடையில் காணாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிதாமகன், இளையராஜா. தனியாகப் பாடல்களைப் பிரித்துக் காட்டி "பிளாட்டினம் டிஸ்க்' வாங்கிய வணிக நிலைகளையெல்லாம் கடந்து படத்தின் உயிர்மூச்சாகியிருக்கிறது அவரது இசை.

விக்ரமின் மாற்றத்தை "வளையாத மூங்கிலில், ராகம் வளைஞ்சு ஓடுதே' என்று ஒற்றை வரியில் சொன்ன பழநிபாரதிக்கும் ஒரு "பலே'!

சிம்ரன் ஆடும் அந்த ஆட்டம் கதைப் போக்கில் நேரும் "இனிய இடையூறு'.

பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவு, காட்சிக் கவிதை. இயல்பான சண்டைக் காட்சிகளில் பெயருக்கேற்றவாறு "ஸ்டன்' சிவா ஸ்தம்பிக்க வைக்கிறார்.

இத்தனை விசைகளையும் முடுக்கியும், அந்த சக்தியைத் திறம்பட இயக்கியும் காட்டியிருக்கும் பாலாவின் உழைப்பு அயர வைக்கிறது.

"விருதுக் கமிட்டி'களுக்கு இருக்கிறது நெருக்கடி...இந்தப் பிதாமகனால்.

- வேணுஜி

நன்றி: தினமணி
[i][b]
!
Reply


Messages In This Thread
பிதாமகன் - by aathipan - 10-29-2003, 07:04 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:42 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:36 AM
[No subject] - by AJeevan - 10-30-2003, 10:07 AM
[No subject] - by veera - 10-30-2003, 12:24 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:37 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 01:49 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:59 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:28 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 04:11 PM
[No subject] - by shanmuhi - 10-31-2003, 08:21 PM
[No subject] - by aathipan - 11-01-2003, 03:55 AM
[No subject] - by சாமி - 11-01-2003, 10:22 PM
[No subject] - by Paranee - 11-05-2003, 01:24 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 12:40 PM
[No subject] - by kuruvikal - 11-06-2003, 05:27 PM
[No subject] - by aathipan - 11-06-2003, 05:52 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 11:39 PM
[No subject] - by AJeevan - 11-07-2003, 12:15 AM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:22 PM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)